பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 0 என் அமெரிக்கப் பயணம்

சொல்லிய முறையில் அமைந்த ஒரு புதிய 3டி படச்சுருள் (film) தினந்தோறும் பறப்பதற்கு (To tly) என்பதுடன் போட்டுக் காட்டப்பெறும். ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் விண்வெளி ஆய்வு lso soul (Albert Einstein Planetorium) ஒரு புதிய காட்சியில் (Show) இன்ஃபனிட்டி எக்ஸ்பிரஸ் (Infinity Express), or outrid ouijt. Gif good & goofloitsu (A warp speed Tour of the Universe) stairs) ULifi/Geir floors;Gorg)t (pjuii, 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை 70 அடி குறுக்களவுள்ள ஒரு பெரிய கூண்டில் (dome) அமைத்துக் காட்டப்பெறும். கட்டணம் பெரியவர்கட்கு 7.50 டாலர்; சிறுவர்க்கு 6 டாலர்.

(3) நாடாளுமன்றக் கட்டடம்: இது காட்டப் பெற்றதை ஊர்தியிலிருந்தபடியே அனைவரும் பார்த்தனர். (படம் - 61)

(4) இருப்பூர்தி நிலையம்: கார்களும் வானூர்திகளும் உள்ள இக்காலத்தில் இருப்பூர்திகளுக்கு அதிகம் பயன் இல்லை. ஒன்றிரண்டு ஊர்திகளே ஒடுகின்றன. ஒருசில பயணிகள் இங்குமங்குமாய் மூட்டை முடிச்சுகளுடன் சிறுவர்களுடனும் நடமாடுவதை வண்டியிலிருந்தபடியே கண்டு களித்தோம்.

(5) மேல்நிலை நீதிமன்றம்':நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் இயங்கும் மிகவும் கம்பீரமான கட்டடம் இது. நீதியரசர்கள் ஆண்டில் அக்டோபர் முதல் ஜூன் வரை கூடுகின்றனர். விசாரணையைப் பொதுமக்கள் பார்க்கலாம். மன்றம் கூடாத நாட்களில் அரைமணி நேரம் இலவசப் பொழிவுகள் நடைபெறுகின்றன.

(6) காங்கிரஸ் நூலகம்"; உலகிலேயே மிகப்பெரிய நூலகம் இது. காங்கிரஸுக்குப் பயன்படுவதற்காக 1800-ல் நிறுவப் பெற்றது. இது மூன்று கட்டடங்களில் 113 மிலியன் நூல்களையும் பொருள்களையும் கொண்டது. இதன் காட்சிப்பொருள் மண்டபங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரலாற்றின் கருவூலமாகவுள்ள பொருள்களையும் விலைமதிப்பற்ற பண்டைய அச்சு வகைகளையும் கொண்டவை. நூலகம் பொருள்களை வெளியில் எடுத்துச் செல்ல எவருக்கும் வழங்குவதில்லை. ஆய்வாளர்கள் மட்டிலும் புரட்டிப் பார்க்கலாம். அரை மணிக்கு ஒருமுறை (மதியம் தவிர) விளக்கத்துடன் அனுமதிக்கப் பெறும். திங்கள் முதல் வெள்ளிவரை முற்பகல் 10-30 மணி முதல் (மதியம் தவிர) பிற்பகல் 3-30 மணி வரை; சனியன்று முற்பகல் 10-30 முதல் பிற்பகல் 2-30 மணி வரை.

5. High Court 6. The Library of Congress