பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்கத் தலைநகரில் உள்ளவை ◆ 175


அடுத்தும், அவர்தம் சகோதரர் இராபர்ட்டின் கல்லறையின் அருகிலும் உள்ளது. அறியாதோரின் கல்லறை[1]களில் குறிப்பிட்டறிய முடியாத கொரிய போர்வீரர், ஒவ்வொரு உலகப்போரில் பங்குகொண்ட வீரர் ஆகியோர் இங்கு புதைக்கப் பெற்றுள்ளனர். 1998 ஜூன் முதல் உடன்பாடுக்கு D.N.R இனம் கண்டபிறகு வியட்நாம் போரில் பங்கு கொண்ட போர்வீரரின் கல்லறை காலியாக உள்ளது. ஒன்றரை மணிக்கு ஒருவராக மாறி மாறி மதிப்பியல் காப்பாளர்[2] ஒருவர் கவனத்துடன் கல்லறையைக் காத்து வருகின்றார். நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை கல்லறை திறக்கப் பெற்றிருக்கும். பார்வையாளர்கட்கு இலவசம்.

(21) தேசிய கலைப் பார்வைக் கூடம்:[3] இதில் கிழக்கு மேற்கு என்ற இரு பகுதிகள் அடங்கும். கிழக்குப் பகுதி ஒரே காலப்பகுதியைச் சார்ந்த உலகிலேயே மிக அருமையான அமெரிக்க ஐரோப்பிய பூச்சுப் பொருள்கள், சிற்பங்கள், மிக்க பேரொளியில் விளங்கும் பொருள்கள் அடங்கிய சேகரத்தைக் கொண்டது இப்பகுதி. மேற்குப்பகுதி 13 முதல் 20-ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த ஐரோப்பிய பூச்சுப் பொருள்கள், சிற்பங்கள் அடங்கிய சேகரத்தைக் கொண்டது. இவற்றில் அமெரிக்கக் கலைபற்றிய செய்திகளிலும் அடங்கும்.

(22) வாஷிங்க்டன் நினைவுச் சின்னம்': [4]நீண்ட சதுர வடிவமானதும் மேலே போகப்போகக் குறைந்துகொண்டே சென்று எகிப்திய சவக் கோபுரம் போல் முடிவடையும் உச்சியையுடைய 555 அடி உயரமுள்ள சலவைக் கல்லாலான இச்சின்னம் முதல் தலைவரான வாஷிங்க்டனின் நினைவாக நிறுவப் பெற்றது. உலகிலேயே இது மிக உயரமானது. இதனை நிறுவ 1833இல் வாஷிங்க்டன் தேசிய நினைவுச் சின்ன சொசைட்டி’ என்ற குழுவொன்று ஏற்படுத்தப்பெற்றது. பதினைந்து ஆண்டுகட்குப் பின்னர் ஒர்அடிக்கல் அமைக்கப்பெற்றது. பல்வேறு சிரமங்கட்கும் தாமதங்கட்குப் பிறகு இச்சின்னப் பணி நிறைவு பெற்றது. இதன் உச்சிவரையில் சென்று பார்க்க மின்ஏற்ற வசதி உண்டு; இறங்குவதற்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 898 படிகளில் விரும்பினால் 190 நினைவுக் கற்களைக் கண்டு மகிழலாம். இவை உள்ளூர் அரசு, வெளிநாட்டு அரசு - இவர்களால் நன்கொடையாக வழங்கப் பெற்றவையாகும். இவற்றை இறங்கிப் பார்க்க விரும்புவோர் இங்குள்ள அலுவலர்களிடம் முன்னேற்பாடு செய்துகொள்ள வேண்டும். நாள்தோறும் முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையிலும்,


  1. 38. Tomb of the Unknowns
  2. 39. Honour guard
  3. 40. National Gallery of Art .
  4. 41.Washington Monument