பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 ♦ என் அமெரிக்கப் பயணம்

தண்டம[1] வேறுபடும். நாங்கள் அட்லாண்டிக் மாநகர் (சூதாட்டக்களநகர்) சென்று கொண்டிருந்தபோது உரிய வேகத்திற்கு மேல் (65).79 கல் வேகமாகச் சென்றது தெரிந்தது. 14 கல் அதிகமாகச் சென்றதால் 10 டாலர் தண்டம் செலுத்த வேண்டியிருந்தது. திரும்ப இல்லத்திற்கு வந்து காசோலை மூலம் தண்டத் தொகையைச் செலுத்தலாம்.

ஒருவரை விசாரித்துக் கொண்டிருக்கும் போது அதிவேகமாகச் செல்லும் கார்கள் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துச் சென்றுவிடும் காட்சிகளைக் காணமுடிந்தது. நடைமுறையில் அதிகமான காவலர் வண்டிகளை வைக்கமுடியாது. வேகமாகச் செல்லும் வண்டிகளை அச்சுறுத்துவதற்காகவே இவ்வமைப்பு ஏற்படுத்த பெற்றுள்ளது. இதனால் குற்றங்கள் குறையுமேயன்றி குற்றங்களை அறவே நீக்க முடியாது. சிறையில் இருப்பவர்கள் மட்டுமா குற்றவாளிகள் ? அதற்குமேல் பன்மடங்கு குற்றவாளிகள் நாட்டில் உலவத்தான் செய்கின்றார்கள்! அவ்வளவு ஏன் ? சட்டசபையில் சட்டம் நிறைவேற்றுபவர்களில் குற்றவாளிகள் எத்தனை பேர் ?

3. கட்டணங்கள்: சாலைகளில் கார் செல்லும்போது வழியில் பல இடங்களில் கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும். ரொக்கம் தரவேண்டியதில்லை; தந்தால் வாங்கவும் ஏற்பாடுகள் இல்லை. கட்டணங்கள் தண்டப்பெறும் அமைப்பின் பக்கத்தில் கார் செல்லும்போது ஒரு வினாடி அது நின்றுபோகும். அப்போது காரின் முன்புறத்தமைப்பிலும், கட்டணம் வாங்கும் அமைப்பிலும் பொருத்தப் பெற்றுள்ள கருவிகளில் 1 டாலர், 2 டாலர் (குறிப்பிட்டுள்ள விகிதப்படி) பதிந்துகொண்டுவிடும். இது தானாக வங்கிக் கணக்கில் சேர்ந்துகொண்டுவிடும்.

இங்ஙனமே கார்கட்கு டீசல், பெட்ரோல் போடப்பெறும்போதும் ரொக்கம் செலுத்த வேண்டியதில்லை. இவ்வளவு காலன் என்று உறுதிசெய்து கொண்டு ‘கிரெடிட் அட்டை’[2] ஒன்றை உரிய இடத்தில் செருகி எண்ணெய்வரும் குழாயை காரில் எண்ணெய் உள்ள இடத்தில் வைத்துவிட்டு, குறிப்பிட்டுள்ள உறுப்பைத் திருகினால் காரில் குறிப்பிட்ட அளவு எண்ணெய் சென்று நிரப்பிவிடும். உரிய இடத்தில் எண்ணெய் விலையைக் குறிப்பிட்டு பில் வெளிவரும். கிரெடிட் அட்டையையும் பில்லையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடலாம். எண்ணெய்க்குரிய கட்டணச்செலவுவங்கிக்கணக்கில் சேர்ந்துவிடும். எண்ணெய் உள்ள இடத்தில் ஆள்தேவை இல்லை; அவன் ஊதியத்திற்குரிய செலவு மிச்சம்.

4. குறைந்த செலவு-அதிகத்தொலைவுப் பயணம்: வேறு பல மாநகர்களின் பொதுப் போக்குவரவு வசதிகளை ஒப்பிட்டு நோக்குமிடத்து,


  1. Fine
  2. Credit Card