பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஐக்கிய நாடுகள் (ஐ.நா.)”

இரண்டாம் உலகப் போர் நின்று சிறிது காலத்திற்குள் (அக்டோபர் 24, 1945-இல்)இந்த நிறுவனம் அமைக்கப்பெற்றது. போர் அடங்கியதும் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவற்றை எதிர்த்த நாடுகள் யாவும் இத்தகைய போர் என்றும் மீண்டும் நிகழாதிருக்க வேண்டும் என்று தீர்மானித்தன. இந்த நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பெற்ற சார்பாளர்கள் கலிஃபோர்னியாவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் ஏப்ரல் 1945-இல் ஒன்றுகூடி உலக அமைதிக்கென ஒரு நிறுவனத்தை உண்டாக்கத் திட்டம் வகுத்தார்கள். இந்தத் திட்டம் ஜூன் 1945-இல் ஐக்கிய நாடுகளின் விதிகள்’’ என்ற பெயரில் வெளிவந்தது. இந்தப் பத்திரத்தில் ஐம்பது நாடுகள் கையெழுத்திட்டன. இவைதாம் ஐக்கிய நாடுகளின் முதல் உறுப்பினர்கள். அதிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் இதில் சேர்ந்தன. இவற்றுள் பெரும்பாலானவை (ஐ.நா. தொடங்கப்பெறும் போது குடியிருப்பு நாடுகள்’.

இங்ஙனம் கிட்டத்தட்ட 200 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ‘ஐக்கிய நாடுகள் (ஐநா) என்ற இந்த நிறுவனம்”. உலக அமைதி, பாதுகாப்பு, மனித நலமேம்பாடு ஆகியவற்றிற்காகச் செயற்பட்டு வருகின்றது. உலகிலுள்ள எல்லாப் பகுதிகளிலுமுள்ள நாடுகள் யாவும் இந்த அமைப்பிற்கு உரியவை. ஒவ்வோர் உறுப்பு நாடும் தமக்கு உரியவர்களாகச் சிலரை ஐ.நா தலைமையகத்திற்குத் தேர்ந்து அனுப்பும். இவர்கள் ஒன்று கூடி பிரச்சினைகளை அணுகிக் கலந்து ஆலோசித்து அவற்றிற்குத் தீர்வு காண்பார்கள்,

ஐ.நா. இரண்டு முக்கியமான நோக்கமுடிவுகளைக் கொண்டது. அவற்றுள் ஒன்று உலக அமைதி, மற்றொன்று மனித மதிப்புடன் கூடிய பெருமிதம். இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளிடையே எங்காவது போர் தொடங்கினால், அதனை நிறுத்த முயலுமாறு ஐ.நா. வைக் கோரலாம். போர் நின்றதும் ஐ.நா. அத்தகைய போர் மீண்டும் தொடங்காதிருக்கும் பொருட்டு வழிவகைகளை ஆராயும். ஆனால், எல்லாவற்றிறிகும் மேலாக ஐ.நா. போர் தொடங்குவதற்கு முன் அதற்குக் காரணமான பிரச்சினைகளையும் தகராறுகளையும் தீர்த்து வைக்க முயலும்,

1. United Nations 2. Caiifornia 3. San Francisco

4. Charter of the United Nations 5. Colonies 6. Organization T. Goals