பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 0 என் அமெரிக்கப் பயணம்

ஐ.நா.வுக்குத் தனிப் பாதுகாப்பு வசதிகள், தீயணைக்கும்படை வசதிகள், தனி அஞ்சல் நிலைய வசதிகள் உள்ளன. தன்னுடைய அலுவல் முறைகளை அரபு, சீனம், ஆங்கிலம், ஃபிரெஞ்சு, உருவிய, ஸ்பானிஷ் மொழிகளில் நடத்தி வருகின்றது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் முன்பாக வடதிசையிலுள்ள ஆப்கானிஸ்தானம் தென் திசையிலுள்ள ஜிம்பாப்வே வரையிலுள்ள அனைத்து நாடுகளின் கொடிகள் பறந்த வண்ணம் உள்ளன. இவை நாள்தோறும் காலையில் ஏற்றப்படும்; மாலையில் இறக்கப்படும்.

விதிமுறைகள்: விதிமுறைகளே ஐ.நா.வின் ஆட்சிமுறைச் சட்டம்’. இது ஐ.நா.வை உண்டாக்கின திட்டத்தையும், ஐ.நா. இயங்கும் விதிகளையும் கொண்டது. ஐ.நா. உறுப்பினர்கள் விதிமுறைகள் கூறும் அனைத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். இந்த விதிமுறைகள் 19 இயல்களாக பிரிக்கப்பெற்று 111 விதிகளையும் கொண்டது. இந்த விதிகளில் ஐ.நா.வின் நோக்க முடிவுகளும்’, அடிப்படை நம்பிக்கைகளும், ஐ.நா. இயங்கும் முறைகளும் அடங்கும்.

நோக்க முடிவுகள்: விதிமுறைகள் நான்கு நோக்கமுடிவுகளைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. அவை: 1. உலக அமைதியையும் பாதுகாப்பையும் கெடாமல் நிலை நிறுத்தல், 2. நாடுகள் யாவும் தமக்குள்ளும் பிறவற்றோடும் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளுதல்; 3, தம்முடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள நாடுகள் ஒத்துழைப்பை நல்குதல் 4. இந்த நோக்க முடிவுகள் சரியாக நடைபெறுவதற்கு தாம் கருவிகளாக இயங்கிச் செயற்பட இசைதல்.

அடிப்படை நம்பிக்கைகள்: விதிமுறைகள் ஏழு அடிப்படை நம்பிக்கைகளைத் தெரிவிக்கின்றன. 1. உறுப்பினர்கள் அனைவருக்கும் சரிசமமான உரிமைகள் உண்டு, 2. எல்லா உறுப்பினர்களும் விதிமுறைகள் கூறும் கடமைகளை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப் பெறுகின்றனர். 3. தமக்குள் நேரிடும் முரண்பாடுகளையும் பிணக்குகளையும் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள ஒப்புக் கொள்கின்றனர்; 4. தமக்குள்ள பாதுகாப்பைத் தவிர, பிற நாடுகளுக்கு எதிராகத் தம் பலத்தைப் பயன்படுத்தவோ, பலத்தைக்காட்டி அச்சுறுத்தவோ கூடாது என்பதை ஒப்புக் கொள்கின்றனர்; 5.விதிமுறைகளிலுள்ள நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஐ.நா. எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் உதவுவதற்கு உறுப்பினர்கள்

21. Zimbabwe 22. Constitution 23. Goals