பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 29

உரங்கானும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்
       துடி எங்கே புகுந்து எவருக்கு உரைப்பது அம்மா
நிரங்காணாப் பிள்ளை எனத் தாய்வி டாளே
       சிவகாம வல்லி எனும் தெய்வத் தாயே

             - நான். திருமுறை, சிவகாமவல்லி துதி-1

என்ற பாடலால் தாயிடம் கொஞ்சுவதுபோல் கொஞ்சுகின்றோம். அடுத்து இராமன் சந்நிதிக்கு வருகின்றோம் இராமன் சீதையுடனும், தம்பி இலக்குவனுடனும் காட்சி தருகின்றான். இவனை, வானின்று இழிந்து வரம்பிகந்த

மாபூ தத்தின் வைப்பெங்கும்
       ஊனும் உயிரும் உணர்வும் போல்
உள்ளும் புறனும் உளன் என்ப
       கூனும் சிறிய கோத்தாயும்
கொடுமை இழைப்பப் கோல்துறந்து
       கானும் கடலும் கடந்து இமையோர்
இடுக்கண் தீர்த்த கழல்வேந்தே

             - கம்ப. அயோ, கடவுள் வாழ்த்து

என்ற கம்பன் வாக்கினால் அயோத்தி அண்ணலை வழிபடுகின்றோம், ஐயப்பன் சந்நிதியை அடைந்து, இக்காலத்தில் பெரும் புகழுடன் திகழும் அப்பெருமகனை,

சாமியே சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா

சாமியே சரணம் ஐயப்பா

என்று மூன்று முறை மக்கள் வாக்கில் அவர்களது நாக்கில்-தாண்டவமாடும் தொடரைச் சொல்லி வணங்குகின்றோம். இறுதியாக ‘ஒன்பது கோள்’ (நவக்கிரகம்) சந்நிதிக்கு வருகின்றோம். இதுபற்றி ஞானசம்பந்தப் பெருமானின் “கோளறு பதிகம்” நினைவிற்கு வருகின்றது.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
       மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்

       உளமே புகுந்த அதனால்