பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 ♦ என் அமெரிக்கப் பயணம்

புகல் ஒன்று இல்லா அடியேன்உன்
       அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே (10)

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர்!
       வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்
படிக்கே இல்லாப் பெருமானைப்
       பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்
       திருவேங் கடத்துக் கிவைபத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து

       பெரிய வானுள் நிலாவுவரே (11)

இவர்கள் பெரியாழ்வார் திருமொழியிலுள்ள திருப்பல்லாண்டில் முதல் இரண்டு பாசுரங்களையும் ஏட்டைப் பார்த்தே சேவித்தனர்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
       பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன்
       செவ்வடி செவ்விதிருக் காப்பு (1)

அடியே னோடும்நின் னோடும்
       பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில்
       வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை
       யும்கட ராழியும் பல்லாண்டு
படைப்போர் புக்கு முழுங்கும் அப்

       பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே (2)

ஏதோ இன்றும் அமெரிக்காவில் திவ்வியப் பிரபந்தம் வாழ்கின்றது என்ற மகிழ்ச்சிதான் எங்கட்கு.

அடுத்து இராமன் சந்நிதிக்குப் போகின்றோம்.

அரக்கர் குலத்தை வேரறுத்து எம்
       அல்லல் நீக்கி அருளாயென்று
இரக்கம் எம்மேல் கருணையினால்

       இசையா உருவம் இவையெய்திப்