பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 ♦ என் அமெரிக்கப் பயணம்

உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறுஆய்
      உலகுய்ய நின்றானை; அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனை; கன்று மேய்த்து
      விளையாட வல்லானை; வரைமீ கானில்
தடம்பருகு கருமுகிலை; தஞ்சைக் கோயில்
      தவநெறிக்கோர் பெருநெறியை; வையம் காக்கும்
கடும்பரிமேல் கற்கியைநான் கண்டு கொண்டேன்-
      கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

- பெரி. திரு. 2.3:3


என்ற பாசுரத்தை மிடற்றொலியால் சேவித்து மீண்டும் கண்ணனை வணங்குகின்றோம்.

இராதாகிருட்டிணனை வணங்கியபின் துர்க்கை சந்நிதிக்கு வருகின்றோம்.

திருவே திகழும் கலைமகளே
      திருவே மலையான் திருமகளே
உருவே இச்சை மயமேமெய்
      உயர்வின் மணமே உயிர்இன்பம்
குருவே ஆதித் தனித்தாயே
      குலவும் பரையாம் பெருந்தாயே
மருவே மலரே சிவகாம
      வல்லி மணியே வலந்தருளே

- திருவருட்பா 4-ஆம் திருமுறை சிவகாமவல்லி துதி-3

என்ற பாடலால் வணங்கி வாழ்த்துகின்றோம்.

கணபதி சந்நிதிக்குப் போந்து அப்பெருமானை,

மேன்மைப் படுவாய் மனமே!கேள்
      விண்ணின் இடிமுன் விழுந்தாலும்,
பான்மை தவறி நடுங்காதே,
      பயத்தால் ஏதும் பயனில்லை;
யான்முன் உரைத்தேன் கோடிமுறை
      இன்னும் கோடி முறைசொல்வேன்
ஆன்மா வான கணபதியின்
      அருளுண்டு அச்சம் இல்லையே!

- பாரதியார் விநாயகர் நான்மணிமாலை - 23