பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 51

ஒரு சமயம் எங்கோ காரில் நாங்கள் காரில் போய்க் கொண்டிருந்தபோது பள்ளியின் பின்பக்கம் எங்கள் பார்வை சென்றது. நூற்றுக்கணக்கான கார்கள் அங்கு நிறுத்தப் பெற்றிருந்தன. வினவியதில் அவை பள்ளி ஆசிரியர்களுடையவை என்பதை அறிந்து கொண்டோம். இதனால் ஆசிரியர்களின் பொருளாதார நிலையை ஒருவாறு ஊகிக்க முடிந்தது.இன்று தமிழகத்திலும் ஆசிரியர்களின் பொருளாதாரநிலை சிறப்புற்றிருப்பதையும், நினைவு கூர்ந்தேன். சிலர் இன்று மகிழ்வுந்தும் வைத்துக் கொண்டுள்ளனர். (2) கரோனா பூங்கா': (ஏப்ரல்-11, வியாழன் - மாலை சுமார் 4.00 மணிக்கு இப்பூங்காவைக் காணச் சென்றோம்.) என் மகனின் இல்லத்திலிருந்து சுமார் 4 கல் தொலைவிலுள்ளது இந்த பூங்கா. சுற்றளவு 5 மைல்; மிகப் பெரிய பூங்கா. பல்லாண்டுகட்கு முன்னர் வாணிகச்சந்தை’ அமைந்து அண்ணாநகர் (சென்னை) உண்டானதுபோல் இங்கும் இருமுறை வாணிகசந்தை நடைபெற்று அந்த இடத்தில் இந்தப் பூங்கா உண்டாயிற்று. நடுவில் ஒரு பெரிய ஏரியும் அதைச் சுற்றி இந்தப் பூங்காவும் அமைக்கப் பெற்றுள்ளது.

1. சென்னையில் இசையரங்கு அமைந்திருப்பது போல் இங்கும் ஒர் அரங்கு உள்ளது. அடிக்கடி இங்கு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுக் கூட்டங்கள், நாடகங்கள், இசை விழாக்கள் முதலியன நடைபெறும். தனியாருக்கு உரியது. பயன்படுத்துவோருக்கு வாடகை உண்டு.

2. பனிக்கட்டி மீது சறுக்கி விளையாடுவதற்கு ஒரு தனிக் கூட்டம் உள்ளது. ரிங்” என்ற பெயரால் வழங்குவது. கட்டணம் செலுத்தி பனிக்கட்டியில் ஒடுவது. சாதாரணத்தரையில் சக்கர அமைப்பைக் காலில் மாட்டிக் கொண்டு ஒடுவது போல், இங்கும் பனிக்கட்டிமீது ஒடுவதற்கேற்ப ஒர் அமைப்பைக் காலில் மாட்டிக் கொண்டு ஒடுவார்கள். தனியாருக்கு உரியது. பயன்படுத்துவோருக்கு வாடகை உண்டு.

3. யு.எஸ். திறந்தவெளி டென்னிஸ் பார்வை அரங்கு சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்திருப்பதுபோல் பார்வையாளர்கள் படிவரிசையில் அமர்ந்து கொண்டு பார்க்கும் இடம் ஒன்று உள்ளது. நல்ல அமைப்பு இது.

1. Carona Park. இது பெரியது. நியுயார்க்கில் பெரிதும் சிறியதுமாகப் பல்வேறு இடங்களில் பல

பூங்காக்கள் அமைக்கப் பெற்றுள்ளன.

2. Trade Fair 3. Music Academy

RINK-Street of ice for skating

. U.S. Open Tennis Stadium