பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 0 57

டென்னிஸ்”, பேஸ்பந்து’, கால்பந்து விளையாடுவதற்கு மூன்று நான்கு இடங்களில் வசதி செய்யப் பெற்றுள்ளன; இவர்கள் விளையாடுவதைப் பார்த்து மகிழும் பார்வையாளர்கட்கு நல்ல இருக்கை வசதிகள் செய்யப் பெற்றுள்ளன.

இங்கு நாய்களைத் தனியாக அவிழ்த்து விடக்கூடாதென்றும் அவை மலங்கழித்து சுத்தம் செய்யாவிடில் அதிகபட்சமாக 1000 டாலர் வரை சட்டப்படி அபராதம் விதிக்கப் பெறும் என்று எச்சரிக்கை செய்யப் பெற்றுள்ளது.

இங்குக் குளத்தில் தூண்டில்களைக் கொண்டு மீன்பிடிக்க உரிமை தரப்பெற்றுள்ளது. குளத்தின் பக்கம் பார்வையாளர்கள் அதிகம் இல்லை.

பந்துகள் விளையாடும் இடங்களிலும் டென்னிஸ் விளையாடும் இடங்களிலும் பார்வையாளர்கள் அதிகம் காணப்பெறுகின்றனர்.

சுமார் ஒரு மணிநேரம் பூங்காவில் அங்குமிங்குமாகச் சுற்றிப்பார்த்து வீடு திரும்புகின்றோம். இல்லத்தை அடையும் போது மணி 7.40 (மாலை). அமெரிக்காவில் பூங்காக்கள் அமைக்கப்பெறாத பகுதிகளே இல்லை என்று சொல்லலாம்.

(6) ஜோன்ஸ் கடற்கரை ஸ்டேட்பூங்கா': ஒருநாள் மாலை 3.00 மணிக்கு இதனைக் காணச் சென்றோம். லாங்க் ஐலாந்து கடற்கரையில் 2413 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. இங்கு ஜாஸ் வளைகுடா கடற்கரையையொட்டிய கடற்பகுதிகள், இரண்டு குட்டைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பில் நீச்சல் ஆடிப் பார்க்க வசதிகள் உள்ளன. குளிக்கும் இல்லங்களும் உள்ளன. கடற்கரையில் நடந்து செல்ல வசதிகள் செய்யப் பெற்றுள்ளன. களம் 4-இல், கால்ஃப் விளையாடவும் களம் அமைந்த விளையாட்டுகள் நடைபெறவும் வசதிகள் உள்ளன. பந்து விளையாட்டுகள் நடைபெறவும், வெட்டவெளி நடனங்கள்’ நடைபெறவும் இலவச ஏற்பாடுகள் உண்டு. வாரஇறுதிநாட்களில் திட்டமிடப்பெற்ற நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுகள் உண்டு.

ஜூன் 2-வது வாரஇறுதி, தொழிலாளர் நாள்-ஆகிய நாட்களில் நாடோறும் காலை முதல் நள்ளிரவு வரையிலும் பூங்கா திறந்திருக்கும். இவை தவிர ஆண்டு முழுவதும் காலை முதல் மாலை வரையும் திறந்திருக்கும். நினைவு நாள் தொழிலாளர் நாள்களில் கார்நிறுத்த கட்டணம் 4 டாலர்; ஆண்டு முழுவதும் இலவசம்.

2. Tennis 3. Base Ball 4. Football 1. Jones Beach State Park 2. Zach’s Bay 3. Softball games

4. Out Door dancing