பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 61

(7) அமெரிக்காவின் ஆதிவாசிகள் செவ்விந்தியர்கள் முதலில் தோலாடைகளை உடுத்திவாழ்ந்தனர் என்பது முதலாகிய வாழ்க்கை வரலாறுகள், படங்கள் மூலம் விவரமாகக் காட்டப் பெற்றுள்ளன.

(8) எரிகற்கள், வீழ்கொள்ளிகள் முதலானவை நடைபெறும் காட்சிகள் படங்கள் மூலம் அற்புதமாகக் காட்டபெற்றுள்ளன. கடலுக்குள் நிலநடுக்கம் எப்படி நடைபெற்றுள்ளது என்பதைக் காட்டும் படங்கள் உள்ளன.

(9) அமெரிக்க மக்களின் பின்னணி; செவ்விந்தியர்கள் பண்டைநிலை - இவர்கள் கலந்து வந்த பல்வேறு நிலைகள், விளக்கமாகக் காட்டப் பெற்றுள்ளன - பல்வேறு விளக்கப் படங்களுடன்,

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு சற்று மேல்நிலையில் இரண்டு மூன்று படிகள் ஏறிய நிலைகளில் பூமியில் கிடைக்கும் பல்வேறு இரத்தின, வைரக்கற்கள் இயற்கையில் கிடைக்கும் பாங்குகளை விளக்கும் முறைகள் பல பெட்டி அடுக்குகளில் பிரித்து வைக்கப் பெற்றுள்ளன.

ஒரிடத்தில் நவரத்தினக் கற்கள் சிறிய அளவில் உள்ளன. பாறைகள் உருவாகும் முறைகளைக் காட்டும் கனிமங்கள், சிறுசிறு பலகையாலான மாடங்கள் பலவற்றில் பல்வேறுவகை சிறியதும் பெரியதுமான வைரக் கற்கள், கடலில் கிடைக்கும் முத்து வகைகள், கனிம வகைகள், உலகில் எந்த இடத்திலும் காணாத பல்வேறு நிற வைரங்கள் (அருங்காட்சியகத்தில் இருப்பது போல), பல்வேறு வகை வேதியியல் பொருள்களடங்கிய கனிமங்கள் தனித் தனியாக வைக்கப் பெற்றுள்ளன. வெளியில் திரும்பும்போது நுழைவாயிலில் மேற்புறம் வழுவழுப்பாக்கப் பெற்றுள்ள ஒரு பெரிய கனிமப் பாறை நமது கவனத்தை ஈர்க்கின்றது.

இரண்டாவது தளம்: இங்கு ஆஃபிரிக்காவிலுள்ள மிருக வகைகள் (பதப்படுத்தப் பெற்றவை) வைக்கப் பெற்றுள்ளன.

முதலில் பார்த்தது மிகப் பெரிய மனிதக் குரங்கு"; அருகில் மான் வகைகள். அடுத்துக் கண்டது. ஒகாபி என்ற பிராணி. இது மத்திய ஆஃபிரிக்காவில் வெப்ப மண்டல மழைப் பிரதேசத்தில் வாழ்வது; இலை வகைகள், மெதுவான தாவர வகைகள், பழவகைகள் முதலானவற்றை உணவாகக் கொள்வது.

அடுத்துக் கண்டவை கலைமான் வகை முகத்திலும் கால்களிலும் வளைவான வெள்ளைக் கோடுகளமைந்த கரடி வகை. நான்கு இடங்களில் நான்கு வகையான மான்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. ஒரிடத்தில்

8, Gorilla 9. Okapi