பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 63

(உ) சீனா, மங்கோலியா, இரஷ்ய நாடுகளின் தொடர்பு கொண்டுள்ள சீனாவின் பெரிய சுவர்” மிகத் தெளிவான படவிளக்கத்துடன் காட்டப் பெற்றுள்ளன.

(3) ஆசியாவின் பாலூட்டும் பிராணிகள்: (அ) காண்டாமிருகம்” மிகப் பெரிய அளவில் இயற்கை சூழ்நிலைகளுடன் காட்டப் பெற்றுள்ளது. இங்ஙனமே (ஆ) காட்டெருமை, (இ) யானை, (ஈ) மான் வகைகள், (உ) குரங்கு வகைகள் மிகப் பெரிய அளவில் அவை வாழ்ந்த இயற்கைச் சூழ்நிலைகளுடன் காட்டி விளக்கம் பெறுமாறு அமைக்கப் பெற்றுள்ளன.

மூன்றாவது தளம்: இங்குக் கண்டவற்றை ஈண்டு வரிசையாகக் குறிக்கின்றேன்.

(1) ஆஃபிரிக்க நாட்டுப் பாலூட்டும் பிராணிகள்: (அ) காட்டுப்பன்றி - வாழ்ந்த சூழ்நிலையில் பெரிய அளவில் காண்போர் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் காட்டப் பெற்றுள்ளது.இங்ஙனமே (ஆ) கிளைக் கொம்புகளையுடைய மான்கள், (இ) பல்வேறு குரங்கு வகைகள், (ஈ) சிறுத்தைப்புலி-பெரியது, (உ) பன்றி வகைகள், (ஊ) காட்டு நாய், (எ) காண்டாமிருகம், இவையாவும் தனித்தனியாகப் பெரிய அளவில் அவை வாழ்ந்த சூழ்நிலைகளிலேயே காட்டப் பெற்றுள்ளன. பதப்படுத்தப் பெற்றவையாயினும் உயிருள்ளனபோல் காணப்பெறுகின்றன.

(2) நெருப்புக்கோழி': மிக வேகமாக ஒடக் கூடிய பிராணி. மிகப் பெரிய முட்டைகளை ஈனக் கூடியது. பல பெரிய முட்டைக் குவியலுடன் காட்டப் பெற்றுள்ளது அது வாழும் இயற்கைச் சூழலுடன்.

(3) கருடன் போல் கழுத்தில் வெண்மை நிறங் கொண்ட செந்நிறப் பறவைகளின் கூட்டம் நம் கவனத்தைக் கவர்வனவாக உள்ளது.

(4) நியுயார்க் நகரில் காணப்பெறும் பறவைகள்: இவை புழு, பூச்சிகளைத் தின்று வாழ்பவை. இவையும் பெரிய அளவில் அவை வாழும் சூழ்நிலை கெடாமல் காட்டப் பெற்றுள்ளன.

(அ) கழுகு, (ஆ) கொக்கு, (இ) வாத்து, (ஈ) காட்டுவான்கோழி"இவைத் தனித்தனியே அவை வாழும் சூழ்நிலையில் பெரிய அளவில் காட்டப் பெற்றுள்ளன.

இவை தவிர நம் கவனத்தைக் கவர்ந்தவை (அ) குரங்கு வகைகள், (ஆ) மனிதர்கள்-அவர்கள் பயன்படுத்தும் ஆயுத வகைகள்,(இ)செவ்விந்தியர்கள்

13. Great Wall of China 14. Rhinoceros 15. Ostrich 16. Wild Turkey