பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 என் ஆசிரியப்பிரான்

ஆகவே இப்போது உள்ளபடியே நடந்துவரச் சந்நிதானம் சம்மதிக்க வேண்டும்' என்ருர்,

“எது கிடைத்தாலும் பெற்றுக் கொள்ள ஆவலாயிருக்கும் பெரும்பாலான மக்கள் உள்ள இந்த உலகில் இத்தகையவர்களும் இருக்கிருர்களே!’ என்று வியந்த ஆதீன்த் தலைவர் அப்பால் அந்தக் கருத்தை வற்புறுத்தவில்லை.

'இந்தக் கட்டிடம்

1910- ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ஆம் தேதி சிதம்பரம்

சைவப் பிரகாச வித்தியாசாலையின் ஆண்டு விழா நடைபெற்றது. அது ஆறுமுக நாவலரால் நிறுவப்பெற்றது. அந்த விழாவிற்குப் பாண்டித்துரைத்தேவர் தலைமை தாங்கினர். ஆசிரியரும் அதற்குச் சென்றிருந்தார். பல புலவர்கள் வந்து பேசினர்கள். ஆறுமுக நாவலர் பெயரால் அங்கே புதுக் கட்டிடம் கட்டப்பெற்றுக் கிருகப் பிரவேசம் நடைபெற்றது. ஆசிரியரைப் பேசும்படி கேட்டுக் கொண் டார்கள்.

ஆசிரியர் பேசும்போது, தமிழில் நல்ல நூல்களை எல்லாம். வெளியிட்ட ஆறுமுக நாவலரவர்களுடைய நினைவை மறவாமல் இருக்க இவர்கள் இங்கே ஒரு புதுக் கட்டிடம் கட்டியிருக்கிருர்கள். அதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. நானும் என்னுடைய ஆசிரியப்பெருமான் நினைவாக ஒரு கட்டிடம் கட்டியிருக்கிறேன்' என்று கூறிச் சிறிதே நிறுத்தினர். அப்படியா? இவர் எங்கே அந்தக் கட்டிடத்தைக் கட்டியிருக்கிருர்?' என்று சபையில் உள்ளவர் கள் யோசனையில் ஆழ்ந்தார்கள். ஆசிரியர் மேலும் பேசலானர், 'இந்தக் கட்டிடம் நூல்வடிவத்தில் இருக்கிறது. இதற்கும் ஒரு திறப்புவிழா முதலில் நடந்தது. எங்கள் ஆசிரியர் எழுதிய நூல்கள் எல்லாவற்றையும் இந்தக் கட்டிடத்தில் ஒருசேர அமைத்து வெளி யிட்டிருக்கிறேன்” என்று பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டைப் பற்றிப் பேசினர். பைண்டு செய்வதையும் கட்டிடம் என்று சொல்வது உண்டு.