பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பல வகைப் பெருமைகள் திருப்பனந்தாள் மடாதிபதியின் உதவி

1910- ஆம் ஆண்டு பிள்ளையவர்களது பிரபந்தத் திரட்டை ஆசிரியர் அச்சிட்டு நிறைவேற்றினர். அவற்றின் இரண்டு பிரதி களேத் திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவராக இருந்த காசிவாசி சோமசுந்தரத் தம்பிரானுக்கு அனுப்பினர் ஆசிரியர் மணி மேகலையைப் பதிப்பித்தபோது உடனிருந்து உதவி செய்தவர் அவர். புத்தகம் கிடைத்த பிறகு அவர் ரூ. 250 அனுப்பினர். அதோடு ஒரு கடிதம் வந்தது. அவர் தமிழ்ப் புலமை படைத்தவராதலின் அந்தக் கடிதத்தைச் சுவையுடன் எழுதியிருந்தார். தாங்கள் பண்டுள்ள நூல்களை எல்லாம் பதிப்பித்து வருகிறீர்கள். ஆலுைம் தங்களுக்குப் பண்டு (Fund) இல்லை. அதற்காக இந்தத் தொகையை அனுப்பி யுள்ளேன்' என்று எழுதியிருந்தார். -

உடனே அதற்கு ஆசிரியர் சமத்காரமாகப் பதில் தெரிவித்தார். திருப்பனந்தாளிலிருந்து முதல் முதலாக வந்த உதவி அது. ஆதலின் அதை மிகவும் பாராட்டி எழுதியதோடு ஒரு கருத்தை எழுதியிருந்தார். நான் இப்போது செய்கிற தமிழ்த் தொண்டை உலகத்தார் பாராட்டுகிருர்கள். நான் பதிப்பிக்கும் நூல்களுக்கு எல்லாம் மூலமாக இருப்பது ஒலேச்சுவடிகள். பனந் தாளில் உள்ள நூல்களைத்தான் வெளியிடுகிறேன். அவற்றினால் தான் இந்தப் புகழ் கிடைக்கிறது. திருப்பனந்தாளில் இருந்துதான் இந்தப் பொருளும் கிடைத்திருக்கிறது' என்று சுவையாகப் பதிலையும் எழுதினர்.

அகநானூற்றைப் பதிப்பிக்காமை

எட்டுத் தொகையில் ஒன்ருகிய அகநானூற்றைப் பதிப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தது. 1910 - ஆம் ஆண்டிலேயே பல ஏடுசுளைத் தொகுத்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினர். மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவராகிய பாண்டித் துரைத்தேவரும் ஆசிரியர் மூலமாக அகநானூறு வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எழுதினர். சங்க நூல்களைப் பதிப்பிப் பதில் ஆசிரியருக்கு இருந்த திறமை உலகம் முழுவதும் தெரிந்திருந்த தால் அவரே அதைப் பதிப்பிக்க வேண்டுமென்று வற்புறுத்தினர். ஆசிரியருக்கும் அதை ஆராய்ந்து பதிப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. -