பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 என் ஆசிரியப்பிரான்

ஆசிரியப்பிரான் சங்கநூல்களைப் பதிப்பித்துப் பு க ழு ம் பணமும் பெறுகிருர் என்ற எண்ணம் பலருக்கு இருந்தது. புகழ் இருந்ததேயொழியப் பணம் இல்லை. ஆசிரியர் ஏடுகள் தேடி ஊர்கள்தோறும் போனதற்குச் செலவிட்ட பணம் அதிகம். அதுமாத்திரம் அன்று; பல இடங்களில் ஏட்டுச்சுவடி இருப்பதாகச் சொல்லி, அதைத் தருவித்துத் தருவதாகப் பலர் அவ்வப்போது பணம் பெற்று வந்தார்கள். ஆசிரியரிடம் பழைய நூல்களின் பெயரைச் சொன்னல் போதும், பணம் கொடுத்து விடுவார் என்ற எண்ணமும் பலரிடம் வளர்ந்திருந்தது. அப்படி எத்தனையோ பேர் ஆசிரியரிடம் ஏதாவதொருபழைய நூலின் பெயரைச்சொல்லிப் பணம் பெற்றுப் போயிருக்கிருர்கள்; சிலர் தங்களிடம் தமிழ்நெறி விளக்கம் இருப்பதாகப் பொய் சொல்லிக் கடிதம் எழுதிப் பணம் பெற்றிருக்கிரு.ர்கள்.

அகநானூற்றை ஆசிரியர் ஆராய்ந்துகொண்டிருந்தபோது, அதைத் தாங்களே பதிப்பித்தால் தங்களுக்குப் பெயரும், பொருளும் வரும் என்று பலர் எண்ணினர்கள். சிலர் அந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிருர்கள் என்பது ஆசிரியருக்குத் தெரிந்தது. வேறு ஒருவர் செய்யும் காரியத்தைத் தாமும் செய்யப் புகுந்தால் அவர்களது முயற்சி தடைப்படும் என்ற காரணத்தினால் அவர்களே பதிப்பிக்கட்டும் என்று ஆசிரியர் இருந்துவிட்டார்.

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் ஆசிரியருடன் நன்கு பழகியவர். அவர் அகநானூற்றைப் பதிப்பிக்க வேண்டுமென்ற முயற்சியில் பல ஏட்டுச்சுவடிகளை விரிவாக ஆராய்ந்து கொண் டிருந்தார். எனினும் அவர் அதனைப் பதிப்பிக்கவில்லை; கடைசியில் ரா. இராகவையங்கார் அவர்களால் அகநானூறு பதிப்பிக்கப் பெற்றது.

மேருமலை ஒன்றுதானே?

1909-ஆம் வருஷம் வி. கிருஷ்ணசாமி ஐயர் ஹைகோர்ட் நீதிபதியாக நியமிக்கப் பெற்ருர், அவருடைய மேதையை அறிந்து, பலர் அவருக்கு ஏற்ற பதவி கிடைத்தது என மகிழ்ந்து பாராட் டினர்கள். ஆசிரியப் பிரானும் அவரைப் போய்ப் பார்த்துத் தம் பாராட்டுதலைத் தெரிவித்துவரச் சென்ருர்.

ஆசிரியரைப் பார்த்தவுடன் கிருஷ்ணசாமி ஐயருக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. :வாருங்கள், வாருங்கள். உங்களைப் பார்த்ததனால் எனக்குப் புதிய ஊக்கம் உண்டாகிறது. வக்கீலாக இருந்தால் எனக்கு நேரம் இராது. இப்போது கிடைத்திருக்கும்