பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ു ലക്ഷ് ബാങ്ക് 9 to

பதவி அதிக வேலை உள்ள பதவியன்று. ஆகையால் இப்போது நீங்கள் அடிக்கடி வரலாம். உங்களோடு உரையாடினல் போதும்: நான் பல செய்திகளைந் தெரிந்துகொள்வேன்' என்று ஆசிரியப் பெருமானிடம் சொன்னர். அதன்படி ஆசிரியப் பெருமானும் அடிக்கடி சென்று போய்ப் பார்த்துவிட்டு வருவது வழக்கம்.

ஒரு சமயம் வி. கிருஷ்ணசாமி ஐயர் திருவிடைமருதூருக்குச் சென்றிருந்தார். திருவிடைமருதூரில் அவரை வரவேற்கத் திருவாவடுதுறை ஆதீனத்தார் ஏற்பாடு செய்தார்கள். அந்தச் சமயத்தில் தாங்களும் வந்து இருக்கவேண்டுமென்று ஆசிரியப் பிரானுக்கு ஆதீனத்தலைவர் கடிதம் எழுதியிருந்தார். அப்படியே ஆசிரியரும் அங்கே போளுர்.

விழா நன்கு நடைபெற்றது. கிருஷ்ணசாமி ஐயர் ஆதீனத் தலைவருடன் ஆதீன சம்பந்தமாகப் பல செய்திகளைப் பேசிக் கொண் டிருந்தார். பிறகு ஆதீனத் தலைவரைப் பார்த்துத் திடீரென்று ஒரு கேள்வி கேட்டார். உங்கள் ஆதினத்தில் மகா வித்துவான் மீட்ைசிசுந்தரம் பிள்ளையவர்கள் இருந்தார்கள். பின்பு ஐயரவர்கள் இருந்தார்கள். அவர்கள் கல்லூரியில் வேலைக்குப்போய்விட்டார்கள். அந்த ஸ்தானத்தில் இவர்களைப் போல யாரை இப்போது வைத்திருக் கிறீர்கள்?’ என்று கேட்டார். ஆதினத்தலைவருக்குச் சற்றுச் சங்கடமாகப் போய்விட்டது. என்ன பதில் சொல்வது என்று தெரிய வில்லை. -

உடனே அருகில் இருந்த ஆசிரியப்பிரான் பதில் சொன்னர்; 'உங்களுக்குப் பின்னல் உங்களைப் போல வேறு யாராவது வருவார் களா? உங்களைப்போலவே வேறு யாராவது ஒருவரைத்தான் தேடிப் பிடிக்க முடியுமா? அவ்வாறே பிள்ளையவர்களைப் போல வேறு யார் ஒருவர் இருக்க முடியும்? மேருமலை என்ருல் ஒரு மலைதானே உண்டு? மற்ற மலைகளெல்லாம் மேரு ஆகுமா? என்று சொன்னர். வி. கிருஷ்ணசாமி ஐயர் சிரித்துக்கொண்டார்.

ஜூலியன் வின்சன் பாடல் ஆசிரியர் பெருங்கதை ஆராய்ச்சி செய்து வருகையில் பேராசிரியர் ஜூலியன் வின்சன் அடிக்கடி அதைப்பற்றி விசாரித்துக் கடிதம் எழுதினர். ஒரு கடிதத்தில்

பூதலஞ் செழிக்கமுத் தீதனை வளர்க்கும்

வேதியர் மரபை விளக்கத் தோன்றிய சாமி நாதநன் மைப் பெரும