பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பிறருக்குச் செய்த உதவிகள்

ஒரு சமயம் வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் ஆசிரியருடைய இல்லமாகிய தியாகராச விலாசம் வந்தார். ஆசிரியப்பெருமான் ஏட்டுச்சுவடிகளைத் தொகுத்து வைத்திருப்பதையும், எப்போதும் வேலை செய்து கொண்டிருப்பதையும் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

ஆசிரியப்பெருமானுக்கு ஏதாவது உபகாரம் செய்ய வேண்டு மென்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று. மாதந்தோறும் அரசாங்கத்திலிருந்து ஏதாவது பொருளுதவி கிடைக்க வேண்டு மென்று அவர் முயன்ருர். ஆனல் அது கைகூடவில்லை.

கடைசியில் அவரது முயற்சியினல் மகாமகோபாத்தியாயப் பட்டம் கிட்டியது. ஆண்டொன்றுக்கு நூறு ரூபாய் அந்தப் பட்டம் பெற்றவர்களுக்கு அரசாங்கத்தார் கொடுத்து வந்தார்கள். அந்தக் காலத்தில் வட மொழிப் புலவர்களுக்கே அத்தப் பட்டம் கிடைத்து வந்தது.

தங்கக் காப்பு

ஒரு நாள் ஒர் எளிய மாணவன் ஆசிரியரிடம் வந்தான். அவன் இந்து உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். அவன் வறியவன். ஆகையால் உபகாரச் சம்பளம் பெற்ருல் படிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று எண்ணினன். ஆசிரியரிடம் தன் வறுமை நிலைமையை எடுத்துரைத்தால் ஏதாவது நன்மை கிடைக்கும் என்று எண்ணி வந்ததாகச் சொன்னன்.

ஆசிரியர் அவனைப் பற்றிய செய்திகளை விசாரித்தறிந்தார். அவன் சொன்ன விவரங்கள் யாவும் உண்மையாக இருந்தன. அதன் பின்னர் இந்து உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியருக்கு ஒரு கடிதம் எழுதிக்கொடுத்தார்.

அந்தக் கடிதத்தை அவனிடம் கொடுக்கும்போது ஆசிரியர் சொன்னர். நீ உன் கையில் தங்கக் காப்பு அணிந்திருக்கிருய். இந்தத் தங்கக் காப்புடன் நீ போய், நான் ஏழை என்று சொன்னல் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உலகம் ஒவ்வொருவரையும் எடைபோடுகிற முறையில்தான் உன்னேயும் எடைபோடும். அதைக்