பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'94 என் ஆசிரியப்பிரான்

கழற்றி வைத்துவிட்டு இந்தக் கடிதத்தைக் கொண்டுபோய்க் கொடு' என்று சொன்னர். உலகியலே நன்கு தெரிந்தே அந்த அறிவுரையைக் கூறினர். பையனும் அப்படியே செய்தான். ஆசிரியர் கொடுத்த கடிதத்தால் அவனுக்கு நன்மை கிடைத்தது.

தர்பார்ப் பாட்டு

1916-ஆம் ஆண்டு டெல்லியில் தர்பார் நடந்தது. ஐந்தாவது ஜார்ஜ் மன்னர் வந்திருந்தார். அப்போது அதைப் பாராட்டும் முறையில் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் லட்ச தீபம் ஏற்றி அந்த விழாவைக் கொண்டாடினர். அப்போது ஆசிரியரும் அங்கே சென்றிருந்தார். அப்போது ஆசிரியர் இயற்றிய சில செய்யுட்கள் வருமாறு:

தார்யூத்த ஒளியுடைய முடிமன்ன ரெவரிலும்நம்

ஜார்ஜூ மன்னர் பேர்யூத்த ஒளியுடைய ரேனுமினும் ஒளிமருவிப்

பிறங்க எண்ணி ஏர்பூத்த விடைமருதற் கோரிலக்கங் தீபம்இந்நாள்

ஏற்று வித்துச் சீர்பூத்த புகழ்பெற்ருய் துறைசையிலம் பலவாண

தேவ நன்றே. (1)

நலமே மிகுமேக நாதன் பொருட்டு நலமே மிகுமேக நரதற்-கலசில்சிறப் பம்பல வாண வருமணியே கின்போல

இம்பப் புரிவா ரிலை. (2)

(ஏகநாதர்-திருவிடை மருதுார்ச் சிவபெருமான்; தனித் தலைவ சாகிய ஜார்ஜ் மன்னர்.)

இலக்கத்தீ பங்கொண் டிலக நரேசன் இலக்கத்தீ பங்கள்தே வேசற்-கலக்கமற ஏற்றுவித்தாய் நாவலந்தீ வென்னுந்தீ பத்துயரை மாற்றுவித்தாய் யார்கின்போல் வார். (3)

நலம்படைத்த ஜார்ஜுமன்னர் முடிசூடும் சிறந்தவிந்த

நாட்கோ முத்தித்

தலம் படைத்த பலனெனுமம் பலவாண தேசிகன்செய்

சிறப்பாற் பாரில்