பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறருக்குச் செய்த உதவிகள் 95

கலம்படைத்தோர் களுமரிய கலபடைத்தோர்

களுமின்னுங் கணக்கி லாத

பலம்படைத்தோர் களும்நிதியப் பயன்படைத்தோர்

களுமாளுர் பாரு ளாரே. (4)

மின்னுமணி முடியரசர் சிகாமணியாம் ஜார்ஜுமன்னர்

மேரி யோடு துன்னுபல வகைச்செல்வம் மருவி அழியாஇன்பம்

துணிஎல் வோர்க்கும் இன்னுமுய காரங்கள் பலபுரிந்து மேன்மேல்வாழ்ந்

திருக்கும் வண்ணம் மன்னுமுழு முதலாய வொருபொருளின் மலரடியை

வாழ்த்து வேல்ை. (5)

தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி

கொழும்பிலிருந்த பெருஞ்செல்வரும், சிறந்த அறிஞருமாகிய பொ. குமாரசாமி முதலியார் என்பவர் ஆசிரியருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். அவர் காலமாகி விட்டார், அவருடைய மூத்த குமாரர் ரீகாந்த முதலியார் என்பவர் கொழும்பில் இருந்தார்.

குமாரசாமி முதலியார் காலமான பிறகு, அவரது பரம்பரையில் வேறு யார் யார் இருக்கிருர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பிய ஆசிரியர், குமாரசாமி முதலியாரின் சகோதரர் அருளுசல முதலியாருக்குக் கடிதம் எழுதியிருத்தார். அருணசல முதலியார் எழுதிய கடிதத்தின் மூலந்தான் குமாரசாமி முதலியாரின் மூத்த குமாரர் பூரீகாந்த முதலியார் விலாசம் ஆசிரியருக்குக் கிடைத்தது. அது முதல் பூரீகாந்த முதலியாருக்கு ஆசிரியர் கடிதம் எழுதி வந்தார். அவரும் ஆசிரியருக்கு எழுதினர்.

தம் தந்தையாரைப் போலவே பூரீகாந்த முதலியாரும் தமிழில் மிக்க அன்பு உள்ளவராக இருந்தார். ஆசிரியரின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டவுடன் தமிழ்ப் புலவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் படி ஏதாவது ஒரு காரியத்தைச் செய்யவேண்டுமென்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப் பற்றிச் சிறப்பான ஆராய்ச்சி ஒன்றை எந்தப் புலவர் எழுதுகிருரோ அவருக்குப் பரிசு தரலாம் என்றெண்ணி ஆசிரியரிடம் யோசனை கேட்டார். மிகவும் நல்ல காரியம் என்று ஆசிரியரும் அதை ஆமோதித்தார்.