பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 என் ஆசிரியப் பிரான்

அதன்பிறகு தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகைகளில் அதைப் பற்றி விளம்பரம் கொடுங்கள் என்று அவர் எழுதியதன்மேல் ஆசிரியப் பெருமானும் விளம்பரம் செய்தார்.

1911-ஆம் ஆண்டு நடந்தது.இது. அப்போது புலவர்களிடையே தொல்காப்பிய ஆராய்ச்சி அவ்வளவு சிறப்பாக நிகழவில்லை. நன்னூலேயே படித்தும்ஆராய்ந்தும் பாடம்சொல்லியும் வந்தார்கள். ஆகையால் பலர் இந்தக் கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ள வில்லை. இராமநாதபுரத்தில் இருந்த மு. இராகவையங்காரும் பள்ளிக்கூட இன்ஸ்பெக்டராயிருந்த வே. முத்துசாமி ஐயரும் கட்டுரைகளை எழுதி அனுப்பியிருந்தார்கள்.

அந்தக் கட்டுரைகளே ஆசிரியப்பெருமானே பார்த்துப் பரிசுக்கு ஏற்றது எது என்பதைத் தீர்மானிக்க வேண்டுமென்று பூரீகாந்த முதலியார் கருதினர். ஆசிரியரும் அப்படியே அந்த இரண்டு கட்டுரைகளையும் ஆராய்ந்து, இராகவையங்காரின் கட்டுரை சிறப்பாக இருக்கிறது என்று அறிந்து, அதற்கு அந்தப் பரிசை அளிக்க வேண்டுமென்று பரிந்துரைத்தார். அந்தக் கட்டுரை பின்னலே தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி என்ற பெயரில் புத்தகமாகவும் வெளியிடப்பெற்றது.