பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பல பெருமக்களின் வருகை மைக்கேல் பிரபுவுடன் படம் எடுத்துக் கொண்டது

ஒரு சமயம் சிலாசாசன அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் கவர்னர் தம்பதிகளேத் தம்முடைய காரியாலயத்திற்கு வரவேண்டு மென்று அழைத்தார்கள். அப்போது கவர்னராக இருந்தவர் மைக்கேல் பிரபு. அவரும் அந்தக் காரியாலயத்திற்கு விஜயம் செய்ய ஒப்புக்கொண்டார். அந்தக் காரியாலயத்தில் நிறையப் பழைய விக்கிரகங்கள் இருந்தன. கவர்னர் தம்பதிகள் வரும்போது அந்த விக்கிரகங்களைப் பற்றி ஏதாவது கேட்டால், சரியான தகவல் களை எடுத்துக் சொல்ல வேண்டுமே என்ற கவலை அந்தக் காரியா லயத்தின் தலைவருக்கு உண்டாயிற்று.

ஒரு நாள் காலையில் அந்தக் காரியாலயத்தின் மானேஜர் ஆசிரியரிடம் வந்தார். அடுத்த வாரம் கவர்னர் தம்பதிகள் தம்முடைய நிலையத்திற்கு விஜயம் செய்யப் போகிரு.ர்கள் என்றும், அங்குள்ள விக்கிரகங்களைப்பற்றிச் சரியாக விளக்கிச் சொல்பவர் யாரும் இல்லையென்றும், ஆசிரியர் அவர்களே அந்த நேரம் அங்கே வந்திருந்து அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். .

அப்படியே செய்வதாக இசைந்தார் ஆசிரியர். சிலாசாசன அலுவலகத்திற்குக் கவர்னர் தம்பதிகள் விஜயம் செய்தார்கள். ஆசிரியப்பெருமான் அவர்கள் கூடவே இருந்து அங்குள்ள விக்கிரகங் களேப்பற்றி எல்லாம் தமிழில் எடுத்துச் சொல்ல, அந்த அலுவலக மானேஜர் அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னர். அவற்றைக் கேட்டுக் கவர்னர் தம்பதிகள் மிகவும் வியப்பு அடைந் தார்கள்; மகிழ்ச்சியும் பெற்ருர்கள். அரை மணிக்கும் அதிக மாகவே அங்கு இருந்தார்கள். அவ்வளவு நேரம் அந்த இடத்தில் அவர்கள் செலவழித்தது மற்றவர்களுக்கு எல்லாம் மிகவும் ஆச்சரிய மாக இருந்தது. 'நான் இதுவரையில் தெரிந்துகொள்ளாத வற்றைத் தெரிந்து கொண்டேன். இங்கே இவ்வளவு அற்புதமான விக்கிரகங்கள் எல்லாம் சிற்பக் களஞ்சியமாக விளங்குவதைக் கண்டு வியப்படைகிறேன். அதுவும் நீங்கள் ஒவ்வொன்றையும் எடுத்து விளக்கிய பிறகுதான் தமிழ்நாட்டின் பெருமையை ஒரளவு எங்களால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது” என்று சொன்னர்,

3604-7 -