பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 என் ஆசிரியப்பிரான்

அப்போது அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் கவர்னர் தம்பதிகளை வைத்துப் படம் எடுக்க வேண்டுமென்று எண்ணிஞர்கள். ஆசிரியர் காரியாலய அறையிலேயே தங்கிவிட்டார். -

பங்களாவின் முன்புறத்தில் படம் எடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். நான்கு நாற்காலிகள் போடப் பெற்றிருந்தன. கவர்னர் தம்பதிகளை அழைத்து வந்து நாற்காலி களில் அமரச் செய்தார்கள். மற்ற இரண்டு நாற்காலிகளிலும் காரியாலயத் தலைவரும் மானேஜரும் உட்கார இருந்தார்கள். அப்போது கவர்னர் சுற்றுமுற்றும் பார்த்தார். எங்கே அந்தப் பண்டிதர்?’ என்று கேட்டார். அவரையும் இங்கே வந்து அமரச் சொல்லுங்கள்” என்ருர். உடனே ஒருவர் பின்னும் ஒரு நாற்காலி கொண்டுவர ஓடினர். மற்ருெருவர் அலுவலகத்தில் உட்கார்ந் திருந்த ஆசிரியரை அழைத்துவரச் சென்றர். ஐந்தாவதாக வேறு ஒரு நாற்காலி போடப் பெற்று அதில் ஆசிரியர் வந்து அமர்ந்த பிறகே கவர்னர் தம்பதிகள் போட்டோ எடுத்துக் கொண் டார்கள். .

சாமானியத் தமிழ்ப் பண்டிதரைப் பக்கத்தில் உட்காரவைத்துக் தொண்டு படம் எடுத்துக் கொண்டார்களே என்று மற்றவர்கள் நினைத்திருக்கலாம். ஆனல் கவர்னரோ ஆசிரியப் பெருமான் அங்குள்ள விக்கிரகங்களைப் பற்றியெல்லாம் எடுத்துச் சொன்ன விளக்கங்களைக் கேட்டு, அவர் மிகப் பெரியவராகத்தான் இருக்க வேண்டுமென்று ஊகித்துக் கொண்டார். ஆகையால், 'உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து போட்டோ எடுத்துக் கொள்வதை நான் பெரும் கெளரவமாகக் கருதுகிறேன்' என்று சொன்னர்.

கார்மைக்கேல் பிரபு வருகை

1911-ஆம் ஆண்டு டிசம்பரில் கவர்னர் கார்மைக்கேல் பிரபு இதன்ஆன் மாநிலக்கல்லூரிக்கு வருவதாக ஏற்பாடாகி இருந்தது. அவர் வரும்போது சில கையெழுத்துப் பிரதிகளையும் ஏட்டுச் சுவடி களையும் எடுத்து வந்து அவருக்குக் காட்டுவதோடு, ஏட்டுச் சுவடியில் எப்படி எழுதுவது என்பதையும் எழுதிக் காட்ட ஆசிரியர் எண்ணினர். அதன் பொருட்டுச் சீவகசிந்தாமணியின் அச்சிட்ட பிரதியையும், ஏடு எழுத்தாணி முதலியவற்றையும் கல்லூரிக்கு எடுத்துச் சென்ருர்,

அப்போது கல்லூரித் தலைவராக இருந்தவர் மிடில்மாஸ்ட் என்பவர். அவரிடம் ஆசிரியர் தம் விருப்பத்தைத் தெரிவித்தபோது, *அப்படியே செய்யலாம். கவர்னர் மிகவும் ஆச்சரியப்படுவார்’ என்று தம்முடைய உடன்பாட்டைத் தெரிவித்தார்.