பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல பெருமக்களின் வருகை 99.

கவர்னர் கல்லூரிக்கு வந்தார். மிகச் சிறந்த முறையில் வரவேற்பு நிகழ்ந்தது. அப்போது வடமொழிப் பேராசிரியராக இருந்த ரங்காசாரியார் முதல்வருடன் வந்து எல்லோரையும் கவர்னருக்கு அறிமுகப்படுத்தினர். தமிழ் வகுப்பையும் காட்டி, ஆசிரியப் பெருமானையும் அறிமுகப் படுத்தினர். 'எனக்கு இவரை முன்பே தெரியும். விக்கிரகங்களைப் பற்றி எனக்குச் சொன்னவர் இவர்தாம்' என்று கவர்னர் சொன்னர்.

. உடனே ஆசிரியப்பெருமானும் அவரைத் தம் வகுப்பறைக்குள் வரவேண்டுமென்று கேட்டுக்கொள்ள அவரும் உள்ளே வந்தார். அவருக்குத் தனி ஆசனம் போட்டு உட்காரச் சொன்னபோது, அதில் உட்காராது, மாணவர்கள் உட்காரும் ஒரு பெஞ்சியிலே அமர்ந்தார்.

ஆசிரியர் அவருக்குப் பழைய ஏட்டுச் சுவடிகளையும், அவற்றில் உள்ள எழுத்துக்களையும், அவற்றைக் கொண்டு அச்சிடப்பெற்ற நூலையும் எடுத்துக் காட்டி, எழுத்தாணி கொண்டு எவ்வாறு ஏட்டுச் சுவடியில் எழுதுவது என்பதையும் தாமே எழுதியும் காட்டினர்.

பத்து நிமிடங்களுக்குள் வந்து திரும்புவதாக இருந்த கவர்னர், அங்கேயே அரைமணிக்கும் மேலாகத் தங்கினர்.

அந்தக் காலத்தில் கல்லூரிகளில் தமிழ்ச் செய்யுட்கள் பாடமாக அமைக்கப் பெறவில்லை. வெறும் கட்டுரை எழுதுவது மாத்திரந் தான் உண்டு. எனவே, அப்போது கவர்னரிடம் ஆசிரியர் சொன்னர்; தமிழில் நிறையச் செய்யுட்கள் இருக்கின்றன. நான் பழைய செய்யுள் நூல்களே நன்ருகப் படித்திருக்கிறேன். அவற்றை யெல்லாம் நாங்கள் பாடம் சொல்வதற்கும் மாணவர்கள் படிப்பதற் கும் இப்போது வாய்ப்பே இல்லை. காரணம், கல்லூரிப் பாடங் களில் அவை சேர்க்கப்பெருது வெறும் கட்டுரை எழுதுவது மாத்திரந்தான் இருக்கிறது. தமிழில் எத்தனையோ நூல்கள் இருக் கின்றன. அவற்றை ஆராய்ந்து படிக்கின்றவர்கள் குறைவாக இருக்கிருர்கள். கல்லூரிப் பருவத்திலேயே அவர்களுக்கு அந்த நூல் களின் சுவையை அனுபவிப்பதற்கு வழியமைத்தால், பின்னல் அவற்றை முழுவதும் நன்முகப் படிக்கவேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். எனவே கல்லூரிகளிலேயே தமிழ் இலக்கியங்களைப் படிப்பதற்கு வழி செய்வது நன்ருக இருக்கும்' என்று சொன்னர்.

பின்னர் ஒரு சமயம் கவர்னர் மகாபலிபுரத்திற்கு விஜயம் செய்வதாக இருந்தார். உடனே அதிகாரிகள் கவர்னருக்கு மகாபலி புரத்தைப்பற்றி நன்ருக விளக்க வேண்டுமென்று ஆசிரியரிடம் வந்து,