பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல பெருமக்களின் வருகை 1 0 1

இவற்றைப் பார்த்து அச்சிடும்போது, பல நூல்களின் ஆராய்ச்சி யால், இன்ன இடத்தில் இன்னவாறு இருத்தல் வேண்டும் என்பதை உணர்ந்து பிழைகளைத் திருத்தி அச்சிட வேண்டியுள்ளது” என்பதை ஆசிரியர் விளக்கினர்.

சுவடி வடிவத்தில் கவர்ச்சி இல்லாமல் உள்ள நூல்கள் அச்சிட்ட புத்தகங்களாக வரும்போது எவ்வளவு அழகுபெறுகின்றன! ஆனல் அந்த அழகு மட்டும் இருந்தால் போதுமா ? நூற்பதிப்பும் திருத்த மாக இருக்க வேண்டும் அல்லவா ? அத்தகைய சிறந்த தொண்டைச் செய்யும் ஆசிரியருக்குத் தமிழுலகம் எந்தக் காலத்தும் கடமைப் பட்டிருக்க வேண்டும் என்று எண்ணினர். ஆசிரியப்பிரான் செய்கிற காரியம் செயற்கரிய செயல் என்று உணர்ந்து பாராட்டினர்.

கிருஷ்ணசாமி ஐயர் மறைவு

191 1-ஆம் வருஷம் டில்லியில் தர்பார் நடந்த சமயத்தில் ஆசிரியர் திருவிடைமருதுாரில் இரண்டு மூன்று நாள் தங்கியிருந்தார். அந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அப்போது அங்கே லட்ச தீபத்தைச் சிறப்பாக நடத்தினர்கள். அதைக் கண்டு ஆசிரியர் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மீது சில பாடல்களை இயற்றிப் பாடினர்.

டில்லி தர்பார் முடிந்த பிறகு திரு வி. கிருஷ்ணசாமி ஐயர் வீட்டிற்குத் திரும்பினர். அவருக்குத் தேக அசெளக்கியம் ஏற்பட்டது. பல காலமாக ஐயர் அவரை அறிவார்; ஆதலின் அவருடைய வீட்டிற்கு அடிக்கடி சென்று பார்த்து வந்தார். பிறகு கிருஷ்ணசாமி ஐயர் காலமானர். அவருடைய பிரிவில்ை ஒரு முக்கியமான உபகாரியை இழந்த துயரம் ஆசிரியருக்கு உண்டாயிற்று.