பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. பலர் செய்த உதவிகள்

திருக்காளத்திப் புராணப் பதிப்பு

1911-ஆம் வருஷம் திருக்காளத்திப் புராணம் என்ற பழைய நூலை ஆசிரியர் ஆராயத் தொடங்கினர். ஏதாவதொரு தலசம்பந்த மான நூலே ஆராயும்போது, அந்த நூல் சம்பந்தமான பிற தலங் களுக்குச் சென்று பல விவரங்களைக் கேட்டும், பார்த்தும் செய்தி களைச் சேகரித்து வருவது அவரது வழக்கம்.

சீகாளத்தியில் திருவாளர்கள் மெ. அரு, நா. இராமநாதன் செட்டியார், மெ. அரு. அரு. அருணசலம் செட்டியார் இருவரும் மிக்க பணம் செலவழித்துக் கும்பாபிஷேகம் நடத்தினர்கள். அதற்கு முன்பாகத் திருக்காளத்திப் புராணம் என்ற பழைய நூலே அச்சிட வேண்டும் என்று ஆசிரியரிடம் சொன்னர்கள்.

ஆசிரியர் திருக்காளத்தி பற்றிய மூல புராணத்தையும், அத்தலத் தைப்பற்றிய தெலுங்கு நூல்களில் உள்ள செய்திகளையும், வாய் மொழியாக வழங்கப்பெறும் செய்திகளையும் அங்கங்கே சென்று விசாரித்துச் சேகரித்தார். கண்ணப்ப நாயனரைப் பற்றி எந்த எந்த நூல்களில் எப்படி எப்படிச் சொல்லியிருக்கிருர்கள் என்பவற்றை யெல்லாம் ஆராய்ந்து திருக்காளத்திப் புராணத்தை அச்சிடுவதற்கு ஏற்றவாறு சித்தம் செய்தார்.

1912-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் திருக்காளத்திப் புராணம் அச்சிடப் பெற்று, காளத்தியில் மகாகும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. ஆசிரியப் பெருமான் அந்தக் கும்பாபிஷேகத் திற்குச் சென்று தரிசனம் செய்து வந்தார்.

திருக்காளத்திப் புராணம் என்பது அதற்கு முன்பு தமிழில் இல்லை. சிவப்பிரகாசர் எழுதிய சீகாளத்திப் புராணம் மாத்திரம் பலருக்குத் தெரியும். இல்லாத பல புதிய செய்திகள் திருக்காளத்திப் புராணத்தில் இருந்தன. அவற்றைக் கண்டு புலவர்கள் பாராட்டி ஞர்கள். நல்ல முறையில் அந்தப் பதிப்பு வெளியாயிற்று. தலபுராணங்களுக்கு அந்தக் காலத்தில் மிக்க மதிப்பு இருந்தது.

திருக்காளத்திப் புராணம் இறைவனருளால் நன்கு நிறை வேறியது பற்றி ஆசிரியருக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. 1912-ஆம்