பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலர் செய்த உதவிகள் 103

வருஷம் செப்டம்பர் மாதம் காளஹஸ்தி சென்று ஒரு வாரம் அங்கிருந்து சுவாமி தரிசனம் செய்து, கிரிப்பிரதட்சினமும் செய்தார்.

சேதுபதி மன்னர் செய்த உதவி

1912-ஆம் ஆண்டில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் நவராத்திரி விழாவுக்கு வரவேண்டுமென்று ஆசிரியருக்கு எழுதினர். அங்கே நவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடை பெறும். புலவர்கள் பேரவையும் இசைப் புலவர்களின் கச்சேரிகளும் நடக்கும்.

ஆசிரியப்பெருமானும் நவராத்திரி விழாவுக்கு இராமநாதபுரம் சென்ருர். பல் புலவர்கள் வந்திருந்தார்கள். எல்லோரும் ஆசிரியரின் பெருமையை நன்கு உணர்ந்தவர்கள். ஆதலின் தங்களே விடப் பெரியவராக எண்ணி மரியாதை செய்தார்கள். சேதுபதி மன்னர் ஆசிரியப்பெருமானுக்குத் தோடா அணிவித்துச் சால் வையும் வழங்கினர்.

'என்னல் உங்களுக்கு ஏதாவது ஆக வேண்டுமானல் சொல்லுங்கள். நீங்கள் செய்து வருகிற அற்புதமான தமிழ்ப் பணிக்கு ஒரு சிறு உபகாரத்தையாவது நான் செய்ய வேண்டு மென்ற எண்ணம் எனக்கு நெடுநாளாக இருந்து வருகிறது” என்று மன்னர் சொன்னர்.

“தாங்கள் எப்படிச் செய்ய விரும்புகிறீர்களோ அப்படிச் செய்யலாம். இன்னது என்று சொல்ல எனக்குத் தெரியவில்லை' என்று ஆசிரியர் சொன்னர்.

சேதுபதி மன்னர் அதுமுதல் ஆசிரியருக்கு உடனிருந்து உபகாரம் செய்பவர்களுக்கு உதவுவதற்காக மாதம் ரூ. 80/அனுப்பி வருவதாகக் சொன்னர். பல ஆண்டுகள் இந்த உதவி சேதுபதியிடமிருந்து ஆசிரியருக்குக் கிடைத்து வந்தது.

'இரப்பவர் என்பெறினும் கொள்வர்; கொடுப்பவர் தாம் அறிவர் தம் கொடையின் சீர்' என்பதை நன்கறிந்து இந்த உதவியைப் புரிந்து வந்தார்.

1915-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சில காலம் பதிப்பு வேலை ஒன்றும் நடக்கவில்லை. ஆசிரியருக்கு உடல்நலம் சிதைவுற்றதே காரணம். ஆகையால் சேதுபதியிடமிருக்து தடிக்குக் கிடைக்கும்