பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 04 என் ஆசிரியப்பிரான்

30 ரூபாய் உதவித் தொகையைத் தொடர்ந்து பெறுவது நியாயம் அன்று என்று ஆசிரியர் நினைத்தார். சேதுபதிக்கு இதுபற்றி எழுதினர். 'என்னிடம் இப்போது யாரும் இருந்து உதவி செய்து வரவில்லை. இருந்தவர்களுக்கும் வேறு வேலை கிடைத்து விட்டதால் அவர்களுக்கு ஒரு குறைவும் இல்லே. எனவே, இப்போது தாங்கள் இதுவரையில் செய்து வந்த உதவியை நிறுத்திக் கொள்ளும்படி வேண்டுகிறேன். இதைத் தவருக சம்ஸ்தானத்தில் எண்ணக் கூடாது' என்று கடிதம் மூலம் தெரிவித்தார்.

ஆனல் சேதுபதி அந்த எண்ணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு தமது சம்ஸ்தான வித்துவான் ராகவையங்காருக்கு ஒரு கடிதம் எழுதச் செய்தார்.

“தாங்கள் சமீபத்தில் சென்னைக்குச் செல்லும்போது ஐயரவர்களை இது விஷயமாகக் கண்டு இப்படி அவர்கள் சொல்வது நமக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றும் அவர்கள் உலகத்திற்குச் செய்து வரும் நன்மைக்கு இது மிகவும்:எளியதும், சொற்பமுமான சகாயந்தான் என்று நாம் எண்ணியிருக்க, அதையும் அவர்கள் ஏற்கச் சிறிது தடங்கல் செய்வது நியாயமல்ல என்றும், அவர்களே இந்தத் தொகையைச் சேர்த்து வைத்திருந்து புதிய நூற்பதிப்புத் தொடங்கும்போது உபயோகித்துக் கொள்ள வேண்டுமென்பது நம் அபிப்பிராயம் என்றும் அவர்களுக்குத் தெரிவித்து, அவர் களுடைய சம்மதத்தைப் பெற்று எழுத வேண்டும்' என்று எழுதினர். ஆகவே, சேதுபதி அவர்களது உதவி தொடர்ந்து கிடைத்து வந்தது. பல ஆண்டுகளுக்குப் பின் இந்த உதவி நின்று விட்டது. அதை அறிந்து திருப்பனந்தாளில் மடாதிபதியாக இருந்த பூரீ காசிவாசி சாமிநாதத் தம்பிரான் அந்தத் தொகையை மாதந்தோறும் அனுப்பி வந்தார்.

பாண்டித்துரையின் மறைவு

மதுரையில் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பாண்டித் துரைத் தேவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவர் அவ்வாறு இருப்பதை அறிந்து ஆசிரியருக்கு நண்பர்கள் செய்தி அனுப்பினர்கள்.

தமிழ் மொழியில் பாண்டித்துரைத் தேவருக்கு இருந்த சிறந்த ஊக்கமும், தமிழ்ப் புலவர்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டு மென்ற ஆர்வமும் அதிகம் என்பதை ஆசிரியர் நன்கு உணர்ந் திருந்தார். . .