பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலர் செய்த உதவிகள் 105

தேவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, மதுரைத் தமிழ்ச் சங்க மானேஜராக இருந்த திரு நாராயண ஐயங்காருக்கு அடிக்கடி கடிதம் எழுதி விசாரித்துக் கொண்டிருந்தார். பாண்டித் துரைத் தேவருக்கு நோய் தீரவில்லை. 1911, டிசம்பர் 2-ஆம் தேதி இரவு 8-30 மணிக்கு ஆசிரியருக்கு ஒரு தந்தி கிடைத்தது. அப்போது அவர் உறங்கச் சென்று விட்டார். அவருடைய குமாரர் அந்தத் தந்தியைப்பிரித்துச் செய்தியை அறிந்தார். எனினும் உடனே ஆசிரியருக்கு அந்தச் செய்தியைச் சொல்லவில்லை. தேவருக்கு அசெளகரியம் முற்றிவிட்டது' என்று மட்டும் சொன்னர். மறுநாள் காலை 8 மணிக்குத்தான் தேவர் காலமான செய்தியை ஆசிரியரிடம் சொன்னர்.

'நேற்றே சொல்லியிருந்தால் ராத்திரி எல்லாம் எனக்குத் துரக்கம் வந்திருக்காது. இப்போதும் என் துக்கத்துக்கு அளவே இல்லை. அவரைப் போல இனி யார் இருப்பார்கள்? தமிழ்ச்சங்கம் இல்லாமல் இருந்த மதுரையில், அதை மீண்டும் தொடங்கி, நான்காவது சங்கமாக நடத்தி வந்தார். மதுரையின் பெருமை சங்கத்தினல் மீண்டும் உயர்ந்து விட்டது. அதை நினைத்து நினைத்து என் உள்ளம் உருகுகிறது' என்று சொல்லிச் சொல்லி, அன்று முழுவதும் எந்த வேலையிலும் ஈடுபடாமல், தேவரவர்களின் குணங் களைப் பற்றிப் பேசுவதிலும் நினைப்பதிலும் ஈடுபட்டுக் கொண் டிருந்தார்.

தேவருக்குப் பிறகு, மதுரைத் தமிழ் சங்கத்தில் துணைத் தலைவ ராக இருந்த திரு டி. எஸ். சுப்பிரமணிய ஐயர் அதன் தலைவரானர். அவர் தமிழில் நல்ல பயிற்சியுள்ளவர். தமிழ்ச் சங்கத்தின் வேலைகளை மிக்க ஊக்கத்துடன் கவனித்து வந்தார். ஆண்டு விழாக்கள் நடக்கும் போதெல்லாம் ஆசிரியருக்கு அழைப்பு வரும். அவர் சென்று கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிப்பார்.

சேதுபதி தமிழ்ச்சங்கத் தலைவர் ஆனது

பாண்டித்துரைத் தேவருக்குப் பிறகு மதுரைத் தமிழ்ச் சங்கத் தின் தலைவராக இருந்த டி. எஸ். சுப்பிரமணிய ஐயரும் காலமாகி விட்டார். அதன் பிறகு அதற்குத் தக்க தலைவர் ஒருவர் வேண்டுமே என்ற கவலை சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு உண்டாயிற்று. இராமநாதபுரம் அரசராக இருந்த இராஜ இராஜேசுவர சேதுபதி அவர்களே தலைவராக இருந்தால் நல்லது என்று கருதினர்கள். ஆனல் அந்தச் செய்தியை அவருக்குச் சொல்வி, ஒப்புக் கொள்ளும் படியாகச் செய்வது மிகவும் கடினமான காரியம் என்று பலரும் தினத்தார்கள். ஆசிரியப் பெருமானுக்கு இச்செய்தியை எழுதி