பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 06 என் ஆசிரியப்பிரான்

ஞர்கள். ஆசிரியர் சேதுபதி மன்னருக்கு ஒரு கடிதம் எழுதி, ‘எப்படியாவது தமிழ்ச்சங்கத்தின் தலைவராகத் தாங்கள் இருந்து தமிழை வளர்க்க வேண்டும்; முற்காலத்தில் அரசர்கள் தமிழை ஒம்பிப் பாதுகாத்தார்கள். அதனல் அவர்கள் புகழும் புலவர்கள் பெருமையும் நிலைத்து நிற்கின்றன” என்று எழுதினர். ஏதேனும் ஒரு சங்கத்தின் தலைவராக இருந்தால் தம்முடைய சம்ஸ்தான வேலைகளுக்கு இடையூருக இருக்குமென்று சேதுபதி மன்னர் தயங்கினர். ஆலுைம் ஆசிரியரிடமிருந்து வந்த கடிதத்தைப் பார்த்து அவரது விருப்பத்தை மறுக்க (Լքւգ. யாமல், அவருடைய வற்புறுத்தலுக்கிணங்கி அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். பல காலம் அதன் தலைவராக இருந்து விளங்கினர். திரு இராஜ இராஜேசுவர சேதுபதி அவர்களுக்குப் பிறகும் பல காலம் சேதுபதி மன்னர்களே மதுரைத் தமிழ்ச்சங்கத் தின் தலைவர்களாக இருந்து வந்தார்கள்.

தமிழ்ப் பேரகராதி

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒரு தமிழ்ப் பேரகராதியை வெளியிட வேண்டுமென்று அக்கழகத்தினர் முயற்சி செய்தார்கள். அதற்காக ஒரு குழுவையும் நியமித்தார்கள். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பிரதிநிதியாகப் பாண்டித்துரைத் தேவர் அக்குழுவில் இருந்தார். அவர் காலமான பிறகு தக்க ஒருவரை அவரிடத்தில் நியமிக்க வேண்டுமென்று எண்ணினர். அதற்கு ஏற்றவர் ஆசிரியப் பிரானே என்ற எண்ணம் தோன்றியது. ஆகவே ஆசிரியரையே அந்தக் குழுவில் ஒர் உறுப்பினராக நியமித்தார்கள்.

தமிழ் அகராதிக் குழு 1913-ஆம்ஆண்டுத் தொடக்கத்தில் தன் காரியாலயத்தை மதுரையில் அமைத்துக் கொண்டது. ஜே. எஸ். சாண்ட்லர் (Rev. J. S. Chandler) என்னும் பாதிரியார் அதற்குத் தலைவராக இருந்தார். அவர் சென்னைக்கு வரும் போதெல்லாம் தியாகராஜ விலாசத்திற்கும் வந்து, ஆசிரியரைப் பார்த்து உரையாடி, அவரது நூல் நிலையத்தைப் பார்த்து மகிழ்ந்து: போவார். அகராதி சம்பந்தமாக என்ன என்ன பணிகளைச் செய்ய வேண்டுமென்று அடிக்கடி ஆசிரியரிடம் உசாவி அதன்படி செயல் படுவார். அகராதி வேலைக்கு நல்ல திறமையான பண்டிதர் ஒருவர் வேண்டுமென்று கேட்டு ஆசிரியரையே ஒரு தகுதியான பண்டிதரைச் சிபாரிசு செய்யச் சொன்னர். அதன்படி திரு மு. இராகவையங்கார் பெயரை ஆசிரியர் பரிந்துரை செய்து மதுரைக்கு அனுப்பினர். மு. இராகவையங்காரும் அப்பணியை 1-2-13இல் ஒப்புக்கொண்டு அகராதி வேலையைக் கவனித்து வந்தார்.