பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பல வேறு முயற்சிகள்

ஆசிரியப்பெருமானுடைய குமாரர் திரு கல்யாணசுந்தர ஐயருக்கு ஐந்து பெண்கள். அவருடைய மூத்த பெண் செள. சரஸ்வதியின் திருமணம் 1912-ஆம் வருஷம் ஜூன் மாதம் 23-ஆம் தேதி ஆசிரியர் இல்லமாகிய தியாகராஜ விலாசத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஆசிரியர் சென்னைக்கு வந்த பிறகு அவர்களுடைய குடும்பத்தில் நடைபெற்ற முதல் மங்களகரமான திருமணம் ஆ இ .

பல பெரிய மனிதர்கள் வந்து திருமணம் விசாரித்துச் சென்ருர்கள். அதற்குத் திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் மிகப் பேருதவி செய்தார். ஆதீனத்திவிருந்து ஒரு தம்பிரான் வந்திருந்தார். தேங்காய், பழம், இலை, காய்கறிகள் முதலிய கல்யாணத்திற்கு வேண்டிய பண்டங்களே எல்லாம் திருவாவடு துறையிலிருந்தே அனுப்பி வைத்தார்கள். பெரும் தமிழ்த். தொண்டாற்றி வருகிற ஐயர் அவர்களுக்கு எத்தனை உபகாரம் செய்தாலும் போதாது என்று பண்டாரசந்நிதிகளே எண்ணி" அவற்றை அனுப்பினர். தாம் பயின்ற திருவாவடுதுறை. ஆதீனத்திலிருந்து தமக்குக் கிடைக்கும் நன்மைகளை அடிக்கடி எடுத்துச் சொல்வது ஆசிரியர் வழக்கம். அவர் கூறும் நன்மைகளில், இதுவும் ஒன்ருக அமைந்தது. -

சோமசுந்தர பாரதியார் பட்ட சிரமம்

துரித்துக்குடியில் வீரபாண்டியக் கவிராயர் என்ற புலவர் ஒருவர் இருந்தார். அவரது வீட்டில் பழைய ஏட்டுச் சுவடிகள் இருப்பதாக ஆசிரியருக்குச் செய்தி தெரிந்தது. அது சம்பந்தமாக அவரது வீட்டை விசாரித்து அங்கு ஏதேனும் பழைய சுவடிகள் கிடைக்குமா எனத் தெரிந்து எழுதுமாறு தூத்துக்குடியில் வக்கீலாக இருந்த திரு சோமசுந்தர பாரதியாருக்கு ஆசிரியர் கடிதம் எழுதினர்.

அவரும் அந்தக் கவிராயர் வீட்டிற்குச் சென்று சில ஏடுகளைப் பார்த்தார். ஏடுகளைப் பார்க்கத் தனியே ஒர் ஆற்றல் வேண்டும். அவர் சிலவற்றை எடுத்துப் பார்ப்பதற்குள்ளேயே மிகவும் சிரமப் பட்டு விட்டார். அவரே தமக்கு ஏற்பட்ட தொல்லேயை ஒரு கடிதத்தில் எழுதினர். இரண்டு மணி நேரத்திற்குள் நான் பட்ட