பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"1 08 என் ஆசிரியப் பிரான்

தொல்லையை நினைக்கிற போது, தாங்கள் ஆயுள் முழுவதும் அத்தகைய உழைப்பை ஏற்றுக் கொண்டீர்களே, உங்களை எப்படிப் பாராட்டுவது? என்று எழுதினர். அவர் அனுப்பியிருந்த ஏடுகளில் சிறப்பான நூல் எதுவும் இல்லாமையில்ை அது பற்றி ஆசிரியர் மேலே முயற்சி செய்யவில்லை. அவற்றில் பெரும்பாலும் கணக்குச் சுருணைகளும் முன்பே வெளியான நூல்களுமே இருந்தன.

அகநானூற்றைப் பதிப்பிக்காமை

சிங்க நூல்களைத் தமிழ் உலகத்திற்கு அறிமுகப்படுத்தி, புறநானூறு முதலியவற்றைத் திருத்தமான முறையில் ஆசிரியர் பதிப்பித்திருப்பதைப் பார்த்த அன்பர்கள் சங்கநூல் யாவற்றையும் ஆசிரியரே பதிப்பிக்க வேண்டுமென்று விரும்பினர்கள். யாழ்ப் :பாணத்திலிருந்து திரு த. கைலாசம் பிள்ளே என்பவர் ஆசிரியர் அகநானூற்றைப் பதிப்பிக்க வேண்டுமென்று ஒரு கடிதம் எழுதினர். அவ்வாறு பதிப்பித்தால் சென்னையில் உள்ள நாவலர் அச்சுக் கூடத்தில் அகநானூறு 10 பாரங்களுக்கு எவ்வித அச்சுக் கூலியும் வாங்காமல் அச்சிட்டுத் தருவதாக எழுதினர். என்ருலும் ஆசிரியர் அதனை வெளியிடலில்லை. பதிப்பிப்பதற்கு வேண்டிய பல ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எல்லாம் அவரிடம் இருந்தன. என்ருலும் வேருெருவர் அச்சிடுவதற்கு முயல்கின்ருர் என்பதை அறிந்து அதை அச்சிடவில்லை. பிறர் செய்வதையே தாமும் செய்தல் கூடாது என்று அதனை அவர் பதிப்பிக்கவில்லை. அவர் பதிப்பித்திருந்தால் அந்நூல் மிகச் சிறந்த முறையில் அமைந் திருக்கும். மற்றவர் அச்சிட்டால் என்ன? உங்களுடைய பதிப்புக்கு உள்ள மதிப்பு அவற்றிற்கு வருமா?" என்று அன்பர்கள் வற்புறுத் தியும் ஆசிரியர் இணங்கவில்லை.

ஆசிரியப்பிரான் தைரியம்

1910-ஆம் ஆண்டு திராவிட பாஷா சங்கக் (Dravidian Board of Studies, Madras University) 3. Ll-th Géogârâurujá pool—Guff, so gil. அதில் ஆசிரியரும் உறுப்பினர். ஆகையால் அவர் அக்கூட்டத்திற்குப் போயிருந்தார்.

"தமிழ்ப் பண்டிதர்கள் ஏதேனும் ஒன்றைப் படித்த பின்னர் அதன் கருத்தைத் தெளிவாகப் பாகுபாடு செய்து சுருக்கமாகவும் அழகாகவும் பிரசுரிக்கவும், பிரசங்கம் செய்யவும் ஒரு தனிப் பயிற்சி அளிக்க வேண்டும்' என்கிற ஒரு தீர்மானித்தின் மீது பலர் ஆங்கிலத்தில் பேசினர்கள். முடிவில் அத் தீர்மானத்தை நிறை வேற்றுவதற்கு முன் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த திரு