பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வேறு முயற்சிகள் 1 09.3

பி. எஸ். சிவசாமி ஐயர், அதெல்லாம் சரிதான். நாம் தமிழைப் பற்றிப் பேசுகிருேம். தமிழ்ப் புலவர்களைப் பற்றிப் பேசுகிருேம். புலவர்களுக்குள்ளே பெரும் புலவராக விளங்கும் ஐயர் அவர்களிடம் இது பற்றிச் சொல்லவில்லையே! அவர்களுக்கு அனுபவத்தில் பல கருத்துகள் தெரிந்திருக்கும். அவர்களுடைய அபிப்பிராயத்தையும். கேட்கலாமா? என்று சொன்னர்,

அதன்மேல் ஆசிரியர் தம்முடைய கருத்தைத் தெரிவிக்க: எழுந்தார்கள். தமிழைப் படிக்க ஆரம்பித்தது முதற்கொண்டு, புலவர்கள் தங்கள் உயிரையே அர்ப்பணம் செய்து, தமிழ்த்தாயை வழிபாடு செய்து படித்து வருகிரு.ர்கள். நூல்களைப் பயிலும் முறையும், பயிற்றுவிக்கும் முறையும் பழைய நூல்களில் நன்கு. சொல்லப் பெற்றிருக்கின்றன. பண்டிதர்கள் பல நூல்களைப படித், திருக்கிருர்கள். பல புலவர்களுக்குப் பல நூல்கள் பாராமல் சொல்ல வரும். ஆங்கிலம் படித்தவர்கள் கட்டுரை எழுதுகிருர்கள் என்பது உண்மைதான். ஆனல் அவர்கள் தாமே பல நூல்களையும் படித்துச் செய்திகளைத் தொகுப்பதில்லை; நன்கு படித்த புலவர்களிட மிருந்து சேகரித்த செய்திகளை வைத்துக்கொண்டே அவர்கள் கட்டுரை எழுதுகிரு.ர்கள். எனக்கு இப்படிச் செய்த பலரையும் தெரியும். அவ்வாறு கட்டுரை எழுதத் தெரிந்த பலருக்கு ஆழமான இலக்கண இலக்கியப் பயிற்சி இருப்பதில்லை. புலவர்கள் கொஞ்சம் பழகினல் போதும்; கட்டுரை எழுதிவிடலாம். ஆனல் பிறரோ ஆழமான தமிழ்ப்புலமையைப் பெற எத்தனே! ஆண்டுகள் படித்தாலும் சாத்தியமாகாது. எனவே, புலவர்களைக் குறைவாக எண்ணி, அவர்களது மதிப்பைக் குறைத்து விடக் கூடாது' என்று வற்புறுத்திச் சொன்னர். ஆசிரியப் பிரான் தம் கருத்தை எடுத்துச் சொன்னவுடன், அந்தத் தீர்மானத்தை நிறை. வேற்ருமல் விட்டு விட்டார்கள். -

அந்தக் கூட்டம் நடந்தபோது திரு வி. கிருஷ்ணசாமி ஐயர் உதகமண்டலத்தில் இருந்தார். ஒரு வாரத்திற்குப்பின் சென்னேக்குத் திரும்பினர். பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தைப் பற்றி அவர் கேள்விப்பட்டார். -

ஆசிரியர் ஒருமுறை அவரைப் பார்க்கச் சென்றபோது, 'வாருங்கள் என மகிழ்ச்சியுடன் வரவேற்ருர், சிவசாமி ஐயர் எல்லாவற்றையும் சொன்னர். தமிழ்ப் பண்டிதர்களே இப்படிக் குறைவாக மதித்துப் பேசியவர்கள் மத்தியில் நீங்கள் அப்படிச் சொல்லவில்லையென்ருல் வாயடங்கி இருக்கமாட்டார்கள். உங்கள் தைரியத்தை நான்மெச்சுகிறேன். இது அல்லவோ மனுஷ்யத்தனம்'