பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0 என் ஆசிரியபபிரான்

எனக் கூறிப் புகழ்ந்தார். இந்தச் செய்தியைக் கேட்ட இராமநாத புரம் சம்ஸ்தான வித்துவான் திரு மு. இராகவையங்கார் ஆசிரியரை, புலவர் மானம் காத்தவர்' என்று எழுதினர்.

பல்கலைக் கழகத்தில் தமிழ் இடம் பெற்றது

i பாலைக் காட்டில் பா. ஐ. சின்னசாமி பிள்ளை என்பவர் இருந்தார். அவர் தமிழன்பும் தமிழ் நூற் பயிற்சியும் உடையவர். அங்கே ஒரு தமிழ்ச் சங்கத்தை நிறுவியிருந்தார். அதற்கு அவரே தலைவர்.

பல்கலைக் கழகம் அப்போது கல்லூரிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டுமா என்று ஆலோசித்தது. கணிதம், விஞ்ஞானம், பொருளாதாரம் முதலிய துறைகளில் மாணவர்களுக்கு அதிகப் பயிற்சி இருத்தல் அவசியம். அப்போதுதான் நாடு முன்னேறும். எனவே தமிழ்ப் பாடம் கட்டாயமாக இருக்க வேண்டியது இல்லை; இவ்வகுப்புக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தைப் பிற துறைகளுக்கு ஒதுக்கலாம் என ஏற்பாடாகி .யிருந்தது.

இதனைத் திரு சின்னசாமி பிள்ளை வன்மையாக ஆட்சேபித்து அரசாங்கத்திற்குக் கடிதம் எழுதினர். மாணவர்கள் தாய் மொழி யாகிய தமிழைப் பயில்வது மிகவும் இன்றியமையாதது என்பதை எடுத்துக் காட்டினர். சொல்லித் தரும் புலவர்கள், காலத்திற் கேற்பப் புது முறையில் சொல்லித் தருவது இல்லை என்று காரணம் கூறுவது சரியல்ல. புதுமுறையில் பழம் பெரும் நூல்களே எல்லாம் பதிப்பித்து வரும் ஐயர் அவர்கள் சென்ஆன் மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக இருக்கிருர், அவரது படிப்பின் பரப்பும், ஆழமும் எவர் மனத்துக்கும் எட்டாதவை. அவரிடம் பாடம் கேட்டால் தமிழில்ை பயன் இல்லை என்று யாரும் நினைக்க மாட்டார்கள். மற்றப் பாடங்களை எடுக்கிற ஆசிரியர்கள் கூட, ஒய்வு கிடைக்கும் போது, ஐயர் அவர்களுடைய வகுப்புக்குச் சென்று பாடம் சொல் இலும் முறையைக் கவனித்து இன்புறுகிருர்கள். இதை நான் நன்கு அறிவேன். ஆகையால், தமிழ்ப் பண்டிதர்கள் எல்லோரும் மோச மானவர்கள் என்றும், விஷயம் தெரியாதவர்கள் என்றும் எண்ணி இப்படிச் செய்தல் கூடாது. ஐயர் அவர்கள் ஐரோப்பாவில் பிறந் திருப்பாரேயானல் மிக உயர்ந்த நிலையை அடைந்திருப்பார்கள்: என்றெல்லாம் மிக விரிவாக எழுதினர்.