பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வேறு முயற்சிகள் § 1 }

அதல்ை தமிழுக்கும் பல்கலைக் கழகத்தில் இடம் கிடைத்தது. தமிழைத் தனியாகக் கற்றுக் கொடுக்கும் முறை மாற்றப் பெற வில்லை. மற்றப் பாடங்களுக்கு இருந்த மதிப்பு அதற்கும் ஏற்பட்டது.

நற்றிணைப் பதிப்பு

பின்னத்துார் நாராயணசாமி ஐயர் என்பவர் கும்பகோணத்தில் இருந்தார். அவர் நற்றிணையை ஆராய்ந்து பதிப்பிக்கலாஞர். அவ்வப்போது தமக்கு ஏற்படும் ஐயங்களே ஆசிரியருக்கு எழுதி விளக்கம் தெரிந்து கொண்டார். நற்றிணையை வெளியிட வேண்டு மென்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தாலும், நாராயணசாமி ஐயர் அதில் ஈடுபட்டிருந்ததல்ை, ஆசிரியர் அதைப் பதிப்பிக்க முயல வில்லை. ஆனலும் அவருக்கு வேண்டிய உதவிகளே எல்லாம் செய்தார். நாராயணசாமி ஐயர் ஒவ்வொரு பாட்டுக்கும் பொழிப்புரை எழுதி வெளியிட்டார். அதன் முகவுரையில், மஹாமஹோபாத் தியாய ப்ரம்மபூர் உ. வே. சாமிநாதையரவர்கள் இரண்டு பிரதிகள் அனுப்பினர்கள். அவற்ருேடு ஒப்பு நோக்கிய பின் மதுரைத் தமிழ்ச் சங்கம் சென்று அங்குள்ள பிரதிகளோடு ஒப்பு நோக்கினேன்' என்று எழுதியிருக்கிரு.ர். பிரதியை உதவியதோடு தாம் சேகரித்து வைத்திருந்த குறிப்புக்களையும் அவருக்கு ஆசிரியப் பிரான் உதவினர்.

மஞ்சள் நூலும், கறுப்பு நூலும்

1914-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாராபுரத்தில் இருந்த ஆறுமுகம் பிள்ளை என்பவர், அந்தத் தாலூக்காவில் முதலியார் பாளையம் என்னும் ஊரில் நாச்சிமுத்துப் புலவர் என்பவரிடத் திலும், கந்தசாமிக் கவிராயர் என்பவரிடத்திலும் வளையாபதி: என்னும் காவியம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன் என்று ஆசிரி யருக்கு எழுதியிருந்தார். அப்படியானல் அந்தக் காவியத்தை வருவித்துப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு உண் டாயிற்று. ஆறுமுகம் பிள்ளைக்குப் பணம் அனுப்பி, அந்த ஏட்டுச் சுவடியைப் பெற்று அனுப்ப வேண்டுமென்று எழுதினர். ஆனல் அவர் அனுப்பவில்லை. இப்படி ஆசை காட்டிப் பணம் பறித்தவர் .ā JöafᎢ .

பல காலம் கழித்து, நான் ஆசிரியப்பிரானுடன் பழைய கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கிருந்த பட்டக்காரராகிய நல்லதம்பிச் சர்க்கரை மன்ருடியாருடன் ஆசிரியர் பேசிக் கொண் டிருந்தார். நான் பல பழைய நூல்களைப் பதிப்பித்து வருகிறேன்.