பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலருக்கு உதவியது i 15 திருக்காளத்தியில் சஷ்டியப்த பூர்த்தி

ஆசிரியப்பெருமான் பிறந்த ஆனந்த வருஷம் மாசி மாதம் 9-ஆம தேதி மறுபடியும் 20-2-1915-இல் வந்தது. பொதுவாகச் சஷ்டியப்த பூர்த்தியைச் சிறப்பாகச் செய்வது பலருடைய வழக்கம். ஆசிரியப் பெருமானது சஷ்டியப்த பூர்த்தியை நல்ல முறையில் நடத்த வேண்டுமென்று அன்பர்கள் விரும்பினர்கள். திருவாவடு துறை ஆதீன கர்த்தர் வற்புறுத்தி, எந்தக் காரியத்தையும் குறைக்காமல் நல்ல முறையில் செய்ய வேண்டுமென்று சொன்னர்.

ஆசிரியப்பெருமான் அவ்வாறு செய்து கொள்வதில் விருப்பம் இல்லாதவராக இருந்தார். எந்த விதமான படாடோபமும் வேண் டாம். காளஹஸ்தி சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறேன். சிவபெருமான் திருவருள் இருந்தால் போதுமானது” என்று சொல்லித் தம் மனைவியையும் அழைத்துக்கொண்டு அந்தத் தலத் திற்குச் சென்ருர், அங்குள்ள பெருமானுக்கு அபிஷேகம் செய்து, கிரிப்பிரதட்சிணம் செய்து வந்தார். தங்களுடைய அவா நிறைவேற வில்லையே, ஆசிரியப்பெருமானைப் பாராட்டுவதற்குரிய சந்தர்ப் பத்தை இழந்துவிட நேர்ந்ததே என்று பல அன்பர்கள் வருந்தினர்கள்.

ஆசிரியப்பெருமான் திருக்காளத்தி சென்றபோது அவருடைய மருமகளுக்குப் பேறுகாலம். அவர் குமாரர் கல்யாணசுந்தரையருக்கு அதுவரை ஐந்து பெண்கள் பிறந்திருந்தார்கள். எனவே இம் முறையாவது தமக்குப் பேரன் பிறக்க வேண்டுமென்றும், பேரன் பிறந்தால் காளஹஸ்திக் கோவிலில் ஒரு மணி கட்டுவதாகவும் ஆசிரியர் அங்கே பிரார்த்தனை செய்து வந்தார்.

காளஹஸ்தியிலிருந்து திரும்பி வந்த சில நாட்களுக்கெல்லாம் அவருக்குப் பேரன் பிறந்தான். தம்முடைய பாட்டனர் பெயராகிய வேங்கட சுப்பிரமணியன் என்ற பெயரை வைத்தார். காளஹஸ்தி சென்று மணியும் வாங்கிக் கட்டினர். அந்தப் பேரர் நல்ல உத்தியோகத்தில் இருந்து ஒய்வு பெற்றிருக்கிரு.ர். க. சுப்பிரமணியன் என்று வழங்கும் அவர் இப் போது திருவான்மியூரில் உள்ள ஐயரவர்களின் நூலகத்தின் காப்பாளராக இருந்து வருகிருர்,

சுவடிகளைத் தொகுக்க உதவியது

- சென்னை அரசாங்கத்தாருக்குப் பழைய ஏட்டுப் பிரதிகளை எல்லாம் தொகுத்துப் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம்