பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 என் ஆசிரியப்பிரான்

உண்டாயிற்று. அதற்காக ஒரு குழுவை நியமித்தார்கள். பலவிடங் களுக்குச் சென்று ஏட்டுச் சுவடிகளைப் பல பேர்களிடமிருந்து சேகரிக்கப் பவரை அனுப்பினர்கள். 1916-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்த முயற்சி ஆரம்பித்தது. மாவட்டக் கலெக்டர்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் ஏட்டுச்சுவடிகளைச் சேகரிக்க உதவ வேண்டுமென்று உத்தரவும் அனுப்பப்பெற்றது அந்த வேலையில் தக்க யோசனை கூற வேண்டுமென்று ஆசிரியப் பெருமான அரசாங்கத் தார் கேட்டு எழுதியிருந்தார்கள். ஆசிரியரும் அன்போடு அந்தக் குழுவின் பணி சிறப்பாக அமைவதற்கு வேண்டிய வழிவகைகளை வகுத்துத் தந்தார். எங்கெங்கே சுவடிகள் கிடைக்கும் என்பதை அறிந்தவராதலின் அவ்விடங்களில் சென்று சுவடிகளைத் தொகுக்கச் சொன்னர். பல சுவடிகள் சேர்ந்தன.ஆயினும் பல பேர்தம்மிடமுள்ள சுவடிகளைக் கொடுக்க மனம் இல்லாமல் மறைத்து விட்டார்கள். ஏதோ புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிய இரகசியம் சுவடி களில் இருப்பதாகச் சிலர் எண்ணினர்கள்!

திருமானுர்க் கிருஷ்ணையர் மறைவு

ஆசிரியருடன் பல காலமாக இருந்து நூல்பதிப்பு வேலைகளுக்கு மிகவும் உதவியவர் திருமானுார்க் கிருஷ்ண யர் என்பவர். எந்தக் காரியத்தையும் துணிவுடன் செய்து வருவார். ஆசிரியப் பெருமானுடைய மனநிலையை அறிந்து எந்த வேலையையும் செய்வார். அவ்வப்போது தியான த்தில் அமர்ந்துவிடுவார். சிவபக்தி மிக்க அவரிடம் ஆசிரியருக்கு த் தனி அன்பு ஏற்பட்டது. அவருடைய பெயரை ஆசிரியப் பெருமான் தாம் பதிப்பித்த நூல்களின் முகவுரையில் குறிப்பிட்டிருக்கிரு.ர்.

1912-ஆம் வருஷம் மாளய அமாவாசைத் தினத்தன்று அவர் காலமானர். அதனை அறிந்த ஆசிரியர் மிகவும் துன்புற்று, "நல்ல பொருள் ஒன்று போய்விட்டது. அத்தகைய நல்ல உள்ளம் படைத்த மற்ருெருவரைப் பார்ப்பது மிகவும் அரிது' என்று சொல்லி மிகவும் வருந்தினர். திருமானுார்க் கிருஷ்ணயர் காலமானபோது அவரது பிராயம் 55.

பாடபுத்தகத்தில் பிழைகள்

1915-ஆம் வருஷம் மெட்ரிகுலேஷன் தேர்வுக்கு ஒரு தமிழ்ப் பாட புத்தகம் வெளியாயிற்று. அதைப் பதிப்பித்தபோது சரியாகக் கவனிக்கவில்லை என்ற குறைபாட்டைப் பலர் எழுப் பினர்கள். அது சம்பந்தமாகப் பாட புத்தகக் குழுவினர் சரியானபடி உணர்ந்துகொள்ள வேண்டுமென்று ஆசிரியப்பெருமானுக்கு