பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலருக்கு உதவியது 117

எழுதினர். ஆசிரியர் அதிலுள்ள பிழைகளை எடுத்து எழுதியபோது அந்தக் காலத்தில் சிண்டிகேட் உறுப்பினராக இருந்த மார்க் ஹண்டர் துரை என்பவர் அவற்றை மறுத்தார். தமிழ்ப்புலவர்களுக்கு உரை நடையைப்பற்றி என்ன தெரியும் என்று அலட்சியமாக எழுதினர். ஆனலும் ஆசிரியப்பெருமான் தக்க காரணங்களை எழுதி அந்தப் புத்தகத்திலுள்ள குறைபாடுகளே எல்லாம் எடுத்துக் காட்டினர். இரண்டு மாதங்களுக்கு மேல் இந்தக் கடிதப் போக்குவரத்து நடந்தது. கடைசியில் ஆசிரியப்பெருமான் சொன்னதே சரி என்று முடிவாயிற்று. - மயிலைநாதர் உரைப் பதிப்பு

கன்னூலுக்கு இப்போதுள்ள உரைகளில் மிகப் பழையது மயிலே நாதர் உரை, மாதவச் சிவஞான முனிவரது உரையைப் பலரும் அறிவார்கள். ஆனல் அவரால் மேற்கோள் காட்டப்பெறும் செய்திகள் எல்லாம் மயிலைநாதர் உரையில் உள்ளன.

முதல் முதலாக நன்னூலுக்கு உரையெழுதிய அவருடைய மதிப்பை யாவரும் உணரவேண்டுமென்று எண்ணி அந்த நூலை ஆராய த் தலைப்பட்டார். பலவிடங்களில் தேடிக் கொண்டு வந்திருந்த ஏட்டுச் சுவடிகளை வைத்துக்கொண்டு பார்த்து ஆராய்ச்சி செய்து வந்தார். பிறகு அதனை நல்ல முறையில் அச்சிட்டார்.

மனைவியார் மறைவு

191 7-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆசிரியப் பெருமானுடைய மனைவியாருக்கு ஜூரம் உண்டாயிற்று. வரவர உடம்பு மிகவும் மெலிந்து வந்தது. அப்போது ஆசிரியர் சென்னையில் இருக்கவில்லை. மணலூர் என்ற ஊரில் பாரதத்தைப் பதிப்பித்த ம. வீ. இராமானுஜாசாரியாரின் மகள் திருமணத்திற்குப் போயிருந் தார். தம்முடைய மனைவியாருக்கு உடல் நலம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு, திருமணத்திற்கு முன்பே சென்னைக்கு வந்தார். டாக்டர் கோமன் என்னும் பெயர்பெற்ற மருத்துவரை அழைத்து வந்து பார்த்தும், குணமாவது சிரமந்தான் என்று சொல்லி விட்டார்கள். 8-5-1917 அன்று ஆசிரியப்பெருமானுடைய மனைவி யார் இறைவன் திருவடியை அடைந்தார்.

திராவிட வித்யா பூஷணம்'

காசியில் பாரத தர்ம மகா மண்டலம்’ என்ற சபை ஒன்று இருந்தது. நமது பண்பாட்டைக் காப்பாற்றும் செயல் புரிபவர் களை எல்லாம் கெளரவிக்கும் செயலை அது மேற்கொண்டுவந்தது.