பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் ஆசிரியப்பிரான் 1. போலீஸ் அதிகாரியின் செயல்

திருவேட்டீசுவரன் பேட்டையில் ஜெயசிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் கொஞ்சம் முரட்டுச் சுபாவம் உடையவர். யாரோ ஒருவர் அவரிடம் காவடிச் சிந்தையும், திருப்புகழையும் பாடியிருக்கிறர். அவற்றிலுள்ள பெண்களின் வருணனைகளைக் கேட்டு அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. 'இப்படியெல்லாம் பாடல்களைப் பாடிக் குழந்தைகளின் மனசைக் கெடுத்துவிடுகிருர்கள். இனிமேல் இத்தகைய புத்தகங்கள்ே வெளி வராமல் தடுத்துவிட வேண்டும்' என்று பேசிக் கொண்டிருந்தார்; அதற்கு வேண்டிய முயற்சிகளையும் செய்யத் தொடங்கினர். இந்தச் செய்தியைச் சில அன்பர்கள் ஆசிரியப் பெருமானிட்ம் வந்து சொன்னர்கள். -

ஆசிரியர் வாழ்ந்து கொண்டிருந்த திருவேட்டீசுவரின் பேட்டை யில்தான் ஜெயசிங் குடியிருந்தார். ஒரு நாள் அந்தப் போலீஸ் அதிகாரியைப் போய்ப் பார்க்க ஆசிரியர் சென்ருர்.

"எங்கே இவ்வளவு தூரம் வந்தீர்கள் ? நானே தங்களைப் பார்க்க வேண்டும் என்றிருந்தேன். தங்களுக்குக் கோர்ட்டிலிருந்து ஸ்ம்மன் வரும்' என்று அந்தப் போலீஸ் அதிகாரி சொன்னர்.

'எனக்கும் கோர்ட்டுக்கும் என்ன சம்பந்தம் ?" :

'ஒரு முக்கியமான விஷயத்தில் தாங்கள் சாட்சி சொல்ல வேண்டும். தமிழ் நூல்கள் சிலவற்றில் பெண்களைப் பற்றி ஆபாச மான வர்ணனைகள் வருகின்றன. அத்தகைய நூல்களையெல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும் என்று சொல்வியிருக்கிறேன். அது பற்றித் தங்களைச் சாட்சியாகப் போடப் போகிறேன்."

"அப்படியா! அதுபற்றித்தான் தங்களைக் கண்டு பேசலாம் என்று வந்தேன்.'

‘'என்ன அது ?"

“தாங்கள் மிகவும் நல்லவர்கள் என்று கேள்விப் பட் டேன். ஆபாசமான விஷயங்களை எல்லாம் நாம் அதிகமாகப் பரவவிடக் கூடாது என்ற எண்ணம் தங்களுக்கு இருப்பது தெரிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய நாகரிகத்தைத் தெரிந்தவர்களுக்குத்தான் இந்த உண்மை நன்ருகத் தெரியும்.

3604—l