பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 18 என் ஆசிரியப்பிரான்

ஆசிரியப் பெருமான் தமிழ்த் துறையில் செய்துவரும் தொண்டை அந்தச் சபையினர் அறிந்தார்கள். இந்தியாவில் எந்த இடத்தில் நல்ல காரியம் நடந்தாலும் அதைப் பாராட்ட வேண்டு மென்பது அந்தச் சபையினரின் கொள்கை. ஆகவே ஆசிரியப்பெரு, மானுக்கு ஏதேனும் மதிப்புச் செய்யவேண்டுமென்று அந்தக் குழு வினர் விரும்பினர்கள். எனவே ஆசிரியப் பெருமானுக்குத் திராவிட வித்யா பூஷணம்’ என்ற பட்டத்தை அளிக்கவேண்டுமென்று தீர்மானித்து, அது சம்பந்தமாகத் திருச்சியில் இருந்த வக்கீல் திரு. டி. வி. சுவாமிநாத சாஸ்திரியார் என்பவருக்கு எழுதினர்கள். அவர் ஆசிரியரிடம் படித்தவர். ஆகையால் அவர் பாரத தர்ம மகாமண்டல சபையினருக்கு, நீங்கள் நினைத்த காரியம் மிகவும் பொருத்தமானது” என்று எழுதி அவரே அந்தப் பட்டத்தினைப் பெற்று ஆசிரியரிடம் கொண்டு வந்து அளித்தார். எதிர்பாராத வகையில் இந்தப் பட்டம் கிடைத்ததுபற்றி ஆசிரியப் பெருமான், காசி விசுவநாதருடைய திருவருள் இப்படிக் கிடைத்தது என்று சொல்லி நன்றி அறிவு பாராட்டினர்.

பரிபாடல் வெளியீடு

விட்டுத்தொகையில் ஒன்ருகிய பரிபாடலில் 70 பாடல்கள் இருந்தன என்று தெரியவருகிறது. ஆனல் அவ்வளவும் கிடைக்க வில்லை. அதற்குப் பரிமேலழகர் உரை ஒன்றுண்டு. சில ஏட்டுச் சுவடிகள் கிடைத்தன. கிடைத்தவையும் நல்ல முறையில் அமைய வில்லை. அவற்றை வைத்துக்கொண்டு பார்க்கிறபோது முதல் பாட்டின் வடிவம் தெரியாமல் சிதைந்திருந்தது. என்ருலும் முதல் பாட்டை வரையறை செய்து பொருள் தெரிந்துகொண்டு ஒருவாறு அதை வெளியிட வேண்டுமென்று ஆசிரியர் துணிந்தார். மற்ற நூல் களுக்குக் கிடைத்த உதவி அதற்குக் கிடைக்கவில்லை. பரிபாடல் என்பது பழைய செய்யுள் வடிவம். அந்தச் செய்யுளில் அமைந்த நூல்கள் வேறு இல்லை. ஆகையால் அதனைச் சரிவர ஆராய்வதற் குரிய துணை நூல்கள் எதுவும் இல்லை. அதற்கு முன்பு இருந்த பரி பாடல்களோ கிடைக்கவில்லை. பிற்காலத்தில் பரிபாடல் யாரும் எழுதவில்லை. இந்த நிலையில்தான் அந்த நூலின் ஆராய்ச்சி ஆசிரிய ருக்கு மிகவும் தொல்லை கொடுத்தது. இறைவன் திருவருளும், விடாமுயற்சியும் சேர்ந்து அந்த நூல் வெளி வருவதற்குத் துணை யாக இருந்தன.

1918-ஆம் வருஷம் ஜூன் மாதம் முதல் தேதி அந்த நூல் வெளியாயிற்று. முன்பே ஆசிரியர் அவர்களால் பரிபாடல் வெளி யிடப் பெறும் நிலையில் இருப்பதை அறிந்து,"அது எப்போது வரும்? '