பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலருக்கு உதவியது - 119

என்று அடிக்கடி கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டிருந்தவர் இலங்கையில் இருந்த பொ. குமாரசாமி முதலியார். அவர் அந்தப் புத்தகம் வெளிவந்தபோது இருக்கவில்லை. ஆனலும் அவருடைய குமாரர் திரு ரீகாந்தமுதலியார் அவர்களுக்குக் கடிதம் எழுதி, பரி பாடல் புத்தகத்தை அனுப்பி, அது வெளிவருவதற்கு அவருடைய தந்தையார் மிகவும் ஆர்வம் காட்டினர் என்பதையும் குறித் திருந்தார். அவரும் மிக்க நன்றியறிவுடன் அப்புத்தகத்தைத் தந்தையாரின் நினைவுடன் சேர்த்து வைத்துக்கொள்வதாக எழுதி யிருந்தார்.

வழக்கில் சாட்சி

1917-ஆம் ஆண்டில்கும்பகோணம் சப்கோர்ட்டில் ஆதீனத்தலை வருக்கு எதிராக ஒரு வழக்கு நடந்துகொண்டிருந்தது. அப்போது அந்த வழக்கில் அவர்களுக்கு அனுகூலமாக வேண்டுமென்று அவரு டைய குணங்களைப் பாராட்டி, ஓர் அறிக்கையைச் சித்தம் செய்து, தமிழ்நாட்டில் பல ஊர்களிலிருந்த பெரிய மனிதர்களிடம் கையெ ழுத்து வாங்கினர்கள். அதை அபிடவிட்டாகக் கோர்ட்டில் சேர்க்க வேண்டுமென்பது அவர்களது எண்ணம்.

ஆசிரியப் பெருமானிடத்திலும் கையெழுத்து வாங்கவேண்டு மென்று எண்ணினர்கள். பல அச்சுப் பாரங்களைத் தயார் செய்து அவற்றில் பெரிய மனிதர்கள் நூற்றுக் கணக்கானவர்களிடம் கையெழுத்து வாங்கியிருந்தார்கள். ஆசிரியருக்கு நூற்ருேடு நாற்று ஒன்ருகத் தாமும் அதில் கையெழுத்துப் போடுவதைவிட, தனியே ஒன்று எழுதிச் சமர்ப்பித்தல் வலிமையுள்ளதாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.

ஆகவே, மடாதிபதியின் பெருமையையும், அந்த மடத்தின் சிறப்பையும், பழங்காலம் முதற்கொண்டு அங்கு நடந்து வருகிற அறச் செயல்களையும், தமிழ், வடமொழி, இசை இவற்றை வளர்ந்து வருவதையும் எடுத்துக் காட்டிச் சம்பிரதாய விரோதம் இல்லாம லும், எந்த விதமான குறைகளையும் சொல்வதற்கு இடமில்லாமலும் அவர்கள் தம் சிவத்தொண்டின ஆற்றி வருகிருர்கள் என்பதனை எடுத்துக் காட்டினர். அதை நீதிமன்றத்திலும் சமர்ப்பித்தார்.

அப்போது நீதிபதியாக இருந்தவர் வி. வி. விசுவநாதையர் என்பவர். அவர் தீர்ப்பு அளிக்கும்போது ஆசிரியப்பெருமானுடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து அதைத் தம் தீர்ப்பிலும் குறிப் பிட்டிருந்தார்.