பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. பெரியோர் சந்திப்பு

திலகர் வருகை

1918-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 30-ஆம் தேதி பாலகங்காதர இலகர் சென்னைக்கு விஜயம் செய்தார். அப்போது சிலர் ஆசிரியப் பெருமானிடம் திலகரது பெருமையை எல்லாம் எடுத்துச் சொன்னர்கள். அவர் விநாயகருடைய புராணத்தைப் பாராட்டி, நாடு முழுவதும் விநாயகப் பெருமானைக் கொண்டாடும்படியாகச் செய்த பெரியவர் என்று சொன்னர்கள். ஆசிரியரும் விநாயகப் பெருமான வழிபடுபவர். எனவே ஆசிரியருக்குத் திலகரை நேரில் சென்று காண வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. திலகருடைய தேசபக்தியின் சிறப்பைப் பிறரால் உணர்ந்து கொண்டார்.

சில அன்பர்கள் ஆசிரியரைத் திலகரிடம் அழைத்துச் சென் ருர்கள். பண்டைத் தமிழ் நூல்களுக்கு உயிர் கொடுத்து, மீட்டும் அந்நூல்களேயெல்லாம் தமிழுலகம் காணும்படி ஆசிரியர் செய்துவரும் சேவையைத் திலகரிடம் எடுத்துச் சொன்னர்கள். அதைக் கேட்டு வியப்புற்ருர். அவர் இந்த நாட்டின் மொழிகளில் வட மொழியைப் போலப் பழமையானது தமிழ் என்பதை அறிந்திருந்தார். ஆசிரியப்பெருமான் இரண்டாயிரம் ஆண்டு களுக்குமுன் தோன்றிய நூல்களை வெளியிடுகிருர் என்றும், அவை இன்றும் பயனுடையனவாக இருக்கின்றன என்றும் அறிந்து வியப் படைந்தார்.

"இந்த நூல்கள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன ?' என்று திலகர் கேட்டார்.

  • புலவர்கள் வீடுகளில் ஒலைச்சுவடிகள் இருக்கின்றன. இந்தப் பழைய நூல்கள் அவற்றில் இருந்தன. அவற்றைத் தேடிக் கண்டு பிடித்துப் பொருள் கண்டு அச்சிட்டேன்."

'அவற்றில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக இருக்குமா ?”

'இப்போது அச்சில் உள்ளவை போல இரா. அன்றியும் பல காலமாக வழிவழியாகப் பிரதி செய்து வந்தமையால் பல பிழைகள் மவிந்திருக்கும். அவற்றையெல்லாம் ஆராய்ந்து திருத்தமான பாடத்தைக் கண்டுபிடித்து அச்சிட வேண்டும்.'