பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 22 - என் ஆசிரியப்பிரான்

பாரதியார் சந்தித்தது

1918-ஆம் ஆண்டு மே மாதம் 15-ஆம் தேதி புதுச்சேரியில் சங்கரஜயந்தி நடந்தது. அந்த விழாவுக்குத் தலைமை தாங்க வேண்டு மென்று ஆசிரியப்பெருமானே அந்த ஊரில் இருந்த கல்லூரிப் பேராசிரியர் சுவாமிநாத திகதிதர் அன்புடன் அழைத்தார். ஆசிரியர் ரெயிலில் புறப்பட்டு இ. வை. அனந்தராமையருடன் அங்கு போய்ச் சேர்ந்தார். அந்தக் காலத்தில் பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்து கொண்டிருந்தார். -

ஆசிரியப்பெருமான் அந்த விழாவில் சிலப்பதிகாரத்தைப்பற்றிப் பேசியதோடு, பழங்காலத்துப் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதைப்பற்றி விரிவாகப் பேசினர். அந்தக் கூட்டத்திற்குப் பாரதியாரும் வந்திருந்தார். ஆசிரியப் பெருமானேப் பார்த்துத் தம்முடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார். மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்ற போது பாரதியார் ஆசிரிய ரைப் ப்ற்றிப் பாடிய பாடல்களைப் பாராட்டி ஆசிரியரும் பாரதியா ரிடம் தம்முடைய மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார்.

"நான் புதுமைப் புலவன். நீங்கள் பழம் புலவர்களேயெல்லாம் வாழச் செய்கிறீர்கள். புலவர் பரம்பரை அழியாமல் காப்பவன்நான். நீங்கள் பழம் புலவர்களைத் தமிழ் மக்கள் மறவாமல் செய்கிறீர்கள் தமிழ்நாட்டில் புலவர் பரம்பரை என்றைக்கும் வாழும். தமிழும் இறவாமல் ஒளிபெற்று விளங்கும். உங்களுக்கு என் மனமார வாழ்த்துக் கூறுகிறேன்' என்று பாரதியார் கூறினர். இவற்றைக் கேட்டு உடனிருந்த பாலகங்காதர திலகர் வியப்படைந்து ஆசிரிய ரைப் பாராட்டினர்.

தம்பிரான் சங்கடத்தை நீக்கியது

திருவாவடுதுறை ஆதீனத் தலைவராக இருந்த அம்பலவாண தேசிகர் மீது ஒரு சமயம் சில தம்பிரான்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. வேறு சிலருக்கும் அவரிடம் வெறுப்பு உண்டாயிற்று. ஆதீனத்தின் மீது ஒரு பெரிய வழக்கை நீதிமன்றத்தில் தொடங்க வேண்டுமென்று பலர் முயற்சி செய்தார்கள், திருவாவடுதுறை மடத்தைச் சேர்ந்த காறுபாறு வைத்தியநாதத் தம்பிரான் என்பவர் இத்தகைய குழப்பமான நிலையில் திருவாவடுதுறையில் இருக்க வேண்டாமென்று காசிக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். -

காசியிலிருந்து திரும்பும்போது சென்னையில் இறங்கி ஆசிரியரைப் பார்ப்பதற்காகத் தியாகராஜ விலாசம் வந்தார்.