பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 என் ஆசிரியப்பிரான்

தக்க சமயத்தில் ஆசிரியப்பிரான் இந்த உதவி செய்த பற்றித் தம்பிரானுக்கும் திருவாவடுதுறை மடாதிபதிக்கும் மிக உவகை உண்டாயிற்று. நான்கு நாளேக்குள் மடத்திலிருந் ஆசிரியர் பழ வியாபாரிக்குக் கொடுத்த தொகை வந்துவிட்டது.

காசி வாசி சொக்கலிங்கத்தம்பிரான்

திருவாவடுதுறை ஆதீனத்தில் அம்பலவாண தேசிகர் இருந் போது ஒரு சமயம் ஒரு குருபூஜைக்கு ஆசிரியர் சென்றிருந்தா அப்போது காசிவாசி சொக்கலிங்கத் தம்பிரான் அங்கே வந்திரு தார். அவர் திருப்பனந்தாள் காசி மடத்தைச் சார்ந்தவ, அப்போது அவர் நன்முக ஒரு பொருளைப்பற்றி எடுத்துச் சொன்னு அதைக் கேட்டஅம்பலவாண தேசிகர் அவரிடம், ! உங்களுடை பேச்சு நன்ருக இருக்கிறது. கூடிய சீக்கிரத்தில் உயர்ந்த பதவிை நீங்கள் பெறக்கூடும்’ என்று சொன்னர். ஆம்; இவர்கள் பேச்சு திறமையாக இருக்கிறது. இவர்கள் சிறந்த பதவியில் இருந்தால் ப தன்மைகள் விளேயும்’ என்று ஆசிரியர் ஆமோதித்தார்.

திருப்பனந்தாள் காசி மடத்தில் தலைவராக இருந்த சொக் லிங்கத் தம் பிரான் என்பவர் 1919-ஆம் ஆண்டு பரிபூரண அடைந்தார். அதற்குப் பிறகு அவருடைய இடத்தில் ஒரு தலைவை நியமிக்க வேண்டியிருந்தது. முன்னே சொன்ன காசிவாசி சொக் லிங்கத் தம்பிரான நியமித்தார்கள். அம்பலவாண தேசிகர் கூறி ஆசி மொழி பலித்தது. ஆசிரியப் பெருமானுக்கும் அதில் மிக் உவகை உண்டாயிற்று. காசிவாசி சொக்கலிங்கத் தம்பிராக ஆசிரியர் மணிமேகலை பதிப்பித்தபோது உடனிருந்து உதவிகளை செய்து வந்தவர். எனவே ஆசிரியரிடம், தம்முடைய தமிழாசிரிய என்ற பக்தி சொக்கலிங்கத் தம்பிரானுக்கு இருந்து வந்தது. திரு பனந்தாளுக்கு அடிக்கடி ஆசிரியரை வருவித்து உபசார செய்விப்பார்.