பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 என் ஆசிரியப்பிரான்

ஆளுல், இலக்கியங்களே நாம் பார்க்க வேண்டிய முறையே வேறு. இருங்காரச் சுவையுடைய நூல்கள் தமிழில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் பல காலமாக இந்த நாட்டில் புலவர்கள் ஆராய்ந்து வருகிரு.ர்கள். செய்யுள் வடிவில் இருப்பதனால் அவற்றைப் படிப்ப வர்களுக்கு இலக்கியச் சுவை தோன்றுமேயொழிய ஆபாசமான உணர்ச்சி தோன்ருது’’ என்று ஆசிரியப் பெருமான் பேச்சை ஆரம்பித்தார்.

'சில பைத்தியக்காரப் புலவர்கள் கன்ன பின்ன என்று பாடிக் குழந்தைகளின் உள்ளத்தைக் கெடுத்து விடுகிருர்கள். அத்தகைய ஆபாசப் பாடல்களைத் தடுத்துவிட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இதுபற்றி எனக்கு ஒரு யோசனை சொன்னல் உபகாரமாக இருக்கும்' என்று அவர் சொன்னர்.

'இப்போது தங்களுக்கு அவகாசம் இருக்கும் அல்லவா ? நிதானமாகப் பேச வேண்டும் என்று வந்திருக்கிறேன்' என்று சொன்னர் ஆசிரியர்.

'பெரியவர்களாகிய தாங்களே வந்திருக்கிற போது, தங்க ளோடு பேசிக் கொண்டிருப்பதைவிட வேறு வேலை எனக்கு என்ன இருக்கிறது ? தாங்கள் சொல்லுங்கள்; நான் கவனிக்கிறேன்' என்ருர் ஜெயசிங். -

'என்னிடம் சில புலவர்கள் வந்து, தங்களைத் தமிழுக்கு விரோதி என்று சொன்னர்கள். நான் அவர்களிடம், தாங்கள் அப்படி இருக்க மாட்டீர்கள் என்று சொன்னேன். பழைய இலக்கியங்களை எல்லாம் கொளுத்திவிட வேண்டும் என்று தாங்கள் சொல்வதாகச் சொன்னர்கள். தங்களைத் தவருக அவர்கள் தெரிந்துகொண்டிருக் கிருர்கள் என்று நான் தீர்மானமாக எண்ணினேன். அதனால்தான் தங்களை நேரில் பார்த்துப் போக வந்தேன்' என்ருர் ஆசிரியர்.

'எல்லாப் புலலர்களுக்கும் என்மேல் கோபம் இருக்கலாம். ஆனல் எனக்கு ஆபாசம் கூடாதென்பதுதான் எண்ணம். அதனல் தான் காவடிச் சிந்து போன்ற புத்தகங்கள் பரவக்கூடா என்று எண்ணுகிறேன்' என்ருர் போலீஸ் அதிகாரி.

"காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகியவற்றில் பெண்களின் வருணனைகள் இருப்பது உண்மைதான். ஆனால் அந்த வருணனைகளை எல்லாம் படித்து அவற்ருேடு நிறுத்திவிடக் கூடாது. பாட்டு முழுவதையும் படித்தால் அந்த மாதிரி ஈடுபடுவது தவறு என்று சொல்லியிருப்பதைக் காணலாம். ஒன்பது ரசங்களில் சிருங்கார ரசம்