பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர் நன்றி 129

அவற்றைக் கண்டு மிகவும் வியந்தார். தாங்கள் புதிய கவிதைகளை இயற்றி மக்களை மகிழ்விக்கிறீர்கள். நான் பழைய புலவரின் கவிதை களுக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றி வருகிறேன். இறைவன் திருவருள் எனக்குத் துணையாக இருக்கிறது' என்ருர் ஆசிரியர்.

"ஆம், இந்த நாட்டில் கவிஞர் பர்ம்பரை என்றும் போகாது. தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்' என்ருர் மகாகவி. என் ஆசிரியர் ஒரு பெரிய கவிஞர். அவருடைய தயையினுல்தான் நான் தமிழில் சிறந்த பயிற்சி பெற்றேன்' என்ருர் ஆசிரியர். ரவீந்திரர் அங்கு வந்திருப்பது தெரிந்து அவரைக் காண வீட்டு வாசலில் பெருங்கூட்டம் கூடிவிட்டது. ரவீந்திரர் வந்திருந்த சமயம் திருக்கழுக்குன்றம் கோவில் தர்மகர்த்தர் ஆசிரியருடன் இருந்தார். இதில் ஏதோ ஒரு குறிப்பு இருப்பதாக ஆசிரியர் எண்ணினர். 'எல்லாம் பின்னல் தெரியும்' என்று உடன் இருந்தவர்களிடம் சொன்னர்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகர் பரிபூரணம் அடைந்தார். அவருடைய இடத்திற்குத் திருக்கழுக்குன்றத்தைச் சார்ந்த தம்பிரான் ஒருவர் தாம் ஆதீனகர்த்தராக வந்தார். தாம் சொன்ன குறிப்புப் பலித்ததை எண்ணி மகிழ்ந்து ஆசிரியர் இதைப் பின்னும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.

ஆசிரியப்பெருமான் சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து விலகியபோது மாணவர்களுக்கு இனிமேல் அவருடைய விரிவுரைகள் கிடைப்பதற்கில்லேயே என்று வருந்திப் பலர் எழுதினர்கள். இன்னும் சிலர் ஆசிரியராக இருந்தபடியே நூல்களைப் பதிப்பித்து வந்த அவருக்கு இனிமேல் முழு நேரத்தையும் பதிப்பு வேலையில் ஈடுபடுத்த நல்லதொரு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்து எழுதியிருந்தார்கள்.

எல்லா இடங்களும் எனக்குச் சொந்தம்' வேலையிலிருந்து விலகிய புதியதில் ஒரு நாள் ஆசிரியர் பெங்களுருக்குச் சென்றிருந்தார். ரெயில்வே ஸ்டேஷனில் ஆசிரியரை வரவேற்க அவரிடம் பாடம் கேட்ட கே. ஆர். சீநிவாசையங்கார் போன்ற கனவான்கள் வந்திருந்தார்கள். சீநிவாசையங்கார் மைசூர் அரசில் பெரிய பதவி வகித்தவர்.

ஸ்டேஷனில் ஆசிரியரை வரவேற்கப் பலர் கூட்டமாக வந்திருந்ததைப் பார்த்து ஒர் அன்பர் ஆசிரியரைப் பார்த்து,

&604一9 -