பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 என் ஆசிரியப்பிரான்

'நீங்கள் ஒய்வுபெற்ற பிறகு பெங்களுரில் வசிக்கப் போகிறீர்களா? இங்கே உங்களுக்கு வேண்டியவர்கள் அதிகமாக இருக்கிருர்கள் போலிருக்கிறதே!' என்று கேட்டார்.

ஆசிரியர் புன்னகை பூத்து, 'தமிழ்நாட்டில் எல்லா இடங்களும் எனக்குச் சொந்தம். 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லியிருப்பது எனக்கு மிகவும் பொருத்தம்' என்று சொன்னர். அது எவ்வளவு உண்மையென்பது தமிழ் அன்பர்களுக்கு நன்ருகத் தெரியும்.

ஆசிரியர் வேலையிலிருந்து விலகிய சமயத்தில் மெட்ராஸ் மெயில் பத்திரிகையில் 9-1-20 ஒரு கடிதம் வந்தது. அதைக் கும்பகோணம் காலேஜில் முதல்வராக இருந்த ஜே. எம். ஹென்ஸ்மென் எழுதியிருந்தார். அவர் இந்த நாட்டில் வேலை பார்த்துவிட்டுத் தம் ஊராகிய யாழ்ப்பாணத்துக்குச் சென்று விட்டார். அங்கிருந்துதான் மெட்ராஸ் மெயிலுக்கு அந்தக் கடிதத்தை அவர் எழுதியிருநதார்.

சென்னை அரசாங்கத்தார் ஐயர் அவர்களுடைய ஒப்பற்ற தமிழ்த்தொண்டை நன்கு தெரிந்து பாராட்ட வேண்டும். அவர் வேலையிலிருந்து விலகிவிட்டதால் எல்லோருக்கும் கொடுப்பது போல ஒபவூதியம் அளிக்காமல், அவரது ஒப்பிலாத தமிழ்த் தொண்டிற்கு ஈடாக முழுச் சம்பளத்தையே ஓய்வூதியமாகத் தர வேண்டு மென்று வற்புறுத் தி எழுதியிருந்தார். இதல்ை அரசாங்கத் திற்குக் கெளரவம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பயனுள்ள சாட்சியம்

1920-ஆம் ஆண்டு சிதம்பரம் கோவில் சம்பந்தமாக ஒரு வழக்கு சிதம்பரம் சப்கோர்ட்டில் நடந்தது. அது சம்பந்தமாக ஆசிரியப்பெருமான் வந்து தங்களுக்குச் சாட்சி சொல்ல வேண்டு மென்று தீட்சிதர்கள் விரும்பினர்கள். 14-4-20 அன்று ஆசிரியரைச் சிதம்பரத்தில் நேரில் விசாரித்தார்கள். அவர் சொன்ன சாட்சியம் தீட்சிதர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருந்தது, அதனல் திட்சிதர்கள் யாவரும் ஆசிரியப்பெருமானப் பாராட்டி உபசாரம் செய்தார்கள்.