பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. திருவாவடுதுறை வாசம் திருவாவடுதுறை சென்றது

15-4-20 அன்று திருவாவடுதுறை ஆதீனகர்த்தராக இருந்த அம்பலவாண தேசிகர் பரிபூரணம் அடைந்தார். காறுபாறு வைத்தியநாதத் தம்பிரான் அவருக்குப் பின் ஆதீனத் தலைவராகப் பட்டம் பெற்ருர். அப்போது ஆசிரியர் சிதம்பரத்தில் இருந்தார். அங்கிருந்து திருவாவடுதுறை சென்று புதிய ஆதீன கர்த்தருக்கு ஆசார்ய அபிஷேகம் நடந்தபோது உடன் இருந்தார். ரீ சுப்பிரமணிய தேசிகர் என்ற திருநாமத்தை அந்தத் தம்பிரான் பெற்ருர்,

அப்போது ஆதீனத்தைச் சார்ந்த தம்பிரான் ஒருவர் தமக்கே அந்தப் பதவி கிடைக்கவேண்டுமென்று கோர்ட்டில் வழக்குப் போட்டார். அதோடு சில கலவரங்கள் நடந்தன. அதனல் யாரேனும் தமக்குத் துணையாக இருக்கவேண்டுமென்று ஆதீனத் தலைவர் விரும்பினர். ஆசிரியப் பிரானேத் தம்முடன் இருந்து வரவேண்டுமென்று வேண்டிக்கொண்டார். 1920-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் திருவாவடுதுறையில், ஆசிரியர் தங்கினர்; அவருக்கு வேண்டிய செளகரியத்தைச் செய்து கொடுத்தார் ஆதீன கர்த்தர். மடத்தில் சுவடிகளும், அச்சிட்ட புத்தகங்களும் இருந்தன. அந்தக் காலத்தில் ஆசிரியர் அந்த இடத்திற்கு மாளுக்கர்கள் சிலரை அழைத்துச் சென்று உடன் இருக்கச் செய்தார். வேறு சிலருக்குப் பாடம் சொன்னர். பெருமதிப்புக்குரிய ஆசிரியர் மடத்திலே தங்கியதால் யாருடைய தொல்லேயும் ஆதீனத் தலைவருக்கு உண்டாகவில்லை. I

திருவாவடுதுறையில் ஆசிரியர் இருந்தபோது அந்த மடத்தின் சம்பந்தமாகத் தேவகோட்டையில் இருந்த சிலரைச் சந்தித்துப் பேச வேண்டி இருந்தது. அங்கே சென்றிருந்த சமயத்தில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் உள்ள இளைஞர் யாரேனும் தமக்கு உதவியாக இருக்கக் கூடுமா என்று விசாரித்தார். அங்கே படித்துக் கொண் டிருந்த கோதண்டராமன் என்ற இளைஞர் ஆசிரியருடன் வரச் சம்மதித்தார். அவரை ஆசிரியர் அழைத்து வந்து தம்முடன் வைத்திருந்தார். அவர் ஆசிரியருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். ஆசிரியர் அவருக்குப் பாடம் சொன்னதோடு, வித்துவான்