பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 என் ஆசிரியப்பிரான்

பரீட்சையில் அவர் தேர்ச்சி பெற்றவுடன் ஒரு கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றும்படியாகவும் செய்தார்.

1920-ஆம் ஆண்டு நவராத்திரியின்போது விஜயதசமி அன்று திருவாவடுதுறையில் இருந்த ஆசிரியர் அங்கு ஒரு பாடசாலையை ஆரம்பித்தார். சுப்பிரமணிய தேசிகர் கலாசாலை என்ற பெயரில் அது நடைபெற்றது. அங்கே சில மாணவர்களுக்குத் தமிழைச் சொல்லிக் கொடுத்தார். தேவாரப் பாடசாலை; தமிழ்ப் பாடசாலை ஆகியவை அங்கே சிறப்பாக நடந்து வரலாயின. அங்கே படிக்கும் மாணவர்களுக்கு மடத்திலிருந்தே உணவு உடை அளித்து வந்தார்கள். ஆசிரியப்பெருமான் தாமே அங்கிருந்து பாடம் சொன்னமையினல் மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பெறச் செளகரியமாக இருந்தது. மடத்தின் பெருமையும் உயர்ந்தது. அதனைத் திருவாவடுதுறை ஆதீன மடத்தின் வரலாற்றில் சிறப்பான காலம் என்று சொல்ல வேண்டும். .

அக்கினி பகவானே அஞ்சின்ை

1920-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் தேதி மதுரைத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் தீப்பற்றியது. பக்கத்து வீடு ஒன்றில் திப் பிடித்து அது சங்கக் காரியாலயத்திற்கும் பரவியது. அதஞ்ல் சில மரச்சாமான்களும், தச்சுக் கருவிகளும் சேதம் அடைந்தன. நல்ல வேளேயாகப் பெரும்பான்மையான புத்தகங்களும், கையெழுத்துப் பிரதிகளும் நெருப்பில் அழியவில்லை. அவற்றையெல்லாம் மிகவும் முயற்சி செய்து காப்பாற்றி விட்டார்கள். அதுபற்றி மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்த சேதுபதி மன்னர் ஆசிரியப் பெருமானுக்கு எழுதினர்; “இறைவன் திருவருளால் தமிழ் காப்பாற்றப்பட்டது. மீளுட்சியம்மை தலைமை தாங்கும் தலத்தில் தமிழுக்கு அழிவு வருமா? மற்றச் சாமான்கள் எரிந்து போனலும் தமிழ்ச் சுவடிகளேத் தீண்டுவதற்கு அக்கினி பகவானே அஞ்சினன் போலும்!” என்றும், இனி இவ்வாறு நேராமல் தக்க பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என்றும் எழுதினர்.

திருப்புகழ்ப் பதிப்புக்கு உதவி செய்தது

தமிழ்நாட்டில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் அங்கங்கே சில பேர்களால் பாடப்பெற்று வந்தன. அவற்றையெல்லாம் தொகுத்துப் புத்தகமாக யாரும் வெளியிடவில்லை. அந்தக் காலத்தில் அரசினர் பதிவுப் பகுதியில் உயர் அதிகாரியாக இருந்த வ. த. சுப்பிரமணிய பிள்ளை என்பவர் திருப்புகழ்ப் பாடல்கள்