பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாவடுதுறை வாசம் 133

எல்லாவற்றையும் தொகுத்து வெளியிட வேண்டுமென்று நினைத் தார். தாம் உத்தியோக விஷயமாக எந்த இடத்திற்குப் போனலும் அங்குள்ளவர்களே அழைத்து, அவர்களுக்குத் தெரிந்த திருப்புகழ்ப் பாடல்களைச் சொல்லச் சொல்லி எழுதி வந்தார். இப்படி மிகவும் சிரமப்பட்டு அவற்றை எல்லாம் தொகுத்த பிறகு சந்தக் குறிப்புக்களோடு இரண்டு பாகங்களாக வெளியிட்டார். அவ்வாறு வெளியிடும்போது அடிக்கடி ஆசிரியப்பெருமானிடம் வந்து தாம் செய்யும் தொண்டைப் பற்றிச் சொல்வார். ஆசிரியப் பெருமான் அவருக்கு வேண்டிய ஊக்கத்தை அளித்ததோடு, பாடல் களில் ஏற்படும் ஐயங்களை நீக்கிப் பொருளையும் விளக்கினர். அந்நூலுக்கு ஒரு சிறப்புப்பாயிரம் வேண்டுமென்று கேட்டார். 21-10-1920-இல் ஒரு சிறப்புப்பாயிரத்தையும் எழுதி அனுப் பினர். -

புதிய பதிப்புக்கள்

1921-ஆம் ஆண்டு மாசி மாதம் மகாமகப் பெருவிழா, கும்ப கோணத்தில் சிறப்பாக நடந்தது. அப்போது அங்கே திருவாவடு துறை ஆதீனகர்த்தர் எழுந்தருளியிருந்தார். வித்வத் சபை நடந்தது. ஆசிரியரை முன்னிட்டு ஆதீனகர்த்தர் அந்தச் சபையை நடத்தினர். ஆசிரியரே அந்தச் சபையை , முன் நின்று நடத்தி வைத்தார். அந்தச் சபைக்கு வந்தவர்கள் ஆசிரியரை வணங்கி வாழ்த்தினர்கள்.

ஆசிரியப் பெருமான் திருவாவடுதுறையில் வசித்து வந்த காலத்தில் சென்னையில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றின் 2-ஆவது பதிப்பு அச்சிடும் வேலைகள் நிறைவேறின. அந்தப் பதிப்புக்களில் பல புதிய பகுதிகளைச் சேர்த்தார்.

பத்துப்பாட்டின் 2-ஆவது பதிப்புப் பல புதிய பகுதிகளுடன் 1921-ஆம் ஆண்டு வெளியாயிற்று. முதல் பதிப்பு வெளியான பிறகு 30 வருஷங்களுக்குப் பிறகே இந்தப் பதிப்பு வெளிவந்தது புதிய பதிப்புப் பதிப்பிக்கும்போதெல்லாம் ஆசிரியப் பெருமான் பல புதிய செய்திகளைச் சேர்க்கும் வழக்கப்படியே பத்துப்பாட்டி லும் அமைந்தது.

- கிலத் பெறுதல்

1922ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ஆம் தேதி வேல்ஸ்

இளவரசர் சென்னைக்கு விஜயம் செய்தார். அப்போது தமிழிலும் வடமொழியிலும் சிறந்து விளங்கும் புலவர்களுக்கு மரியாதைசெய்ய