பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 என் ஆசிரியப்பிரான்

வேண்டுமென்று அரசினர் நினைத்தனர். ஆசிரியப்பெருமானுக்கும் ஒரு கிவத் கிடைத்தது. அதை வாங்கும்போது நீண்ட மேலங்கியும் தலைப்பாகையும் அணிந்துகொள்ள வேண்டுமென்று அறிவித்திருந்த தால் ஆசிரியப்பெருமான் அவ்வாறே அணிந்துகொண்டு சென்று அந்த மரியாதையைப் பெற்ருர். ஆசிரியர் பெற்ற சிறப்புத் தமிழ்த்தாய்க்கே செய்த சிறப்பாகும் என்று பலரும் பாராட்டினர்.

வேல்ஸ் இளவரசரைச் சந்திக்கும் பொருட்டுச் சென்னைக்கு வந்த ஆசிரியப்பெருமான் சில நாட்கள் இங்கேயே தங்கியிருந்து விட்டுத் திருவாவடுதுறை சென்ருர்.

திருவாவடுதுறை சென்று திரும்புதல்

அப்போது ஆதீனத் தலைவராக இருந்த சுப்பிரமணிய தேசிக ருடைய உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாயிற்று. அவர் நோய் வாய்ப்பட்டு 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ஆந்தேதி பரிபூரணம் அடைந்தார்.

அதன் பிறகு ரீ வைத்தியலிங்க தேசிகர் ஆதீனத் தலைவராக அபிஷேகம் பெற்று ஆதீன ஞானசிரியரானர். அவரே தமக்குப் பின் வரவேண்டுமென்று முன்னுல் இருந்த ஆதீனத் தலைவர் எழுதி வைத் திருந்த உயிலில் ஆசிரியப்பெருமானும் ஒரு சாட்சியாகக் கையொப்பமிட்டிருந்தார்.

சுப்பிரமணியதேசிகர் பதவி வகித்த காலம் இரண்டு ஆண்டு களுக்கு மேல் இல்லை. அவர் காலத்திலேயே மடத்தின் தலைமை பற்றிய வழக்குகள் நடந்தன. உள்ளுறப் புகைந்துகொண்டிருந்த சில பேர்கள் அடிக்கடி தொல்லைகள் கொடுத்துவந்தார்கள். ஆசிரியப் பெருமான் தம்முடன் இருந்தால் நல்லது என்று சுப்பிரமணிய தேசிகர் கேட்டுக் கொண்டார். அதனல் ஆசிரியப்பெருமான் திருவாவடுதுறையில் தங்கியிருந்தார். எனினும் அவர் அங்கே இருந்த போது அங்கிருந்த சூழ்நிலைகளைப் பார்த்து ஆசிரியப் பெருமான் சென்னைக்கே திரும்பி விடலாம் என்று பல முறைகள் நினைத்ததும் உண்டு. எனினும் ஆதீனத்தலைவருடைய வற்புறுத்தல் காரணமாக ஆசிரியர் அங்கிருந்து விலக முடியவில்லை. திருவாவடு துறையில் தங்கியிருப்பதல்ை தம்முடைய தமிழ் ஆராய்ச்சிப் பணிகள் தடைப்படுவதைப் பெரிதும் உணர்ந்த ஆசிரியப்பெருமான், தக்கவாறு புது ஆதீனத்தலைவரிடம் சொல்லிக் கொண்டு சென்னைக்கே திரும்பினர்.